Header Ads



ஜோதிடத்தை நம்பிக்கொண்டு அரசியலுக்கு வரவில்லை - ஹிருணிகா

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் தலைவர் மாதுலுவாவே ​சோபித்த ​தேரர் நேற்று நடைபெற்ற கருத்தரங்கொன்றில் வலியுறுத்தியுள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதி  முறையை இல்லாது செய்தல, 17 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தல்,  தேர்தல் முறையை மாற்றுதல், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவை உரிய முறையில் செயற்படுத்தல், போன்ற ஒப்புதல்களை 100 நாட்களில் நிறைவேற்றுவதாக  ஜனாதிபாதி மைத்திரிபால சிறிசேன எமக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இவற்றை , நிறைவேற்றுவதாக மக்களுக்கு கூறியுள்ளோம். எனவே  நிறைவேற்றுவது கட்டாயமான விடயம் என்று மாதுலுவாவே ​சோபித்த ​தேரர் தெரிவித்துள்ளார்
காரணம் இல்லாமல் நாங்கள் யுத்தம் செய்யவில்லை. யுத்தம் செய்யவதற்கான தேவை எமக்கிருந்த போதுலும்  அதற்கான தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது என ஜெனரல் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
நாம் ஏதேனும் ஒன்றின் மீது சரியான முறையில் நம்பிக்கைகொண்டு, தெளிவாக இருந்தால் எல்லாம் நன்மையாகவே நடக்கும் என்றும் நான் ஒருபோதும் ஜோதிடத்தை நம்பிக் கொண்டு அரசியலுக்கு வரவில்லை எனவும் ஹிருணிகா தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.