Header Ads



இஸ்லாமிய தேச தலைவர் அபூபக்கர் பக்தாதி, அமெரிக்காவால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்

இஸ்லாமிய தேசம் குழுவின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி ஒரு தசாப் தத்திற்கு முன்னர் அமெரிக்க இராணுவத்தால் ஈராக்கில் ஒரு சிவில் கைதி யாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததன் இரகசிய ஆவணத்தை அமெரிக்க ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில் சிறை உடையுடன் இருக்கும் பக்தாதியின் புகைப்படமும் வெளியாகியுள்ளது. பிஸ்னஸ் இன்சைட் இணையத்தளம் வெளியிட்டிருக்கும் செய்தியில் பக்தாதி தொடர்பில் பல உண்மைகளும் வெளியாகியுள்ளது. இந்த இரகசிய ஆவணத்தின்படி, பல மாதங்கள் அமெரிக்காவின் தடுப்புக் காவலில் இருந்திருக்கும் பக்தாதி கருத்துச் சுதந்திரத்திற்கான சட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பக்தாதியின் பெயர், இப்ராஹிம் அவாத் இப்ராஹிம் அல் பத்ரி என குறிப்பிடப்பட்டுள்ளது. பக்தாதி அமெரிக்காவின் தடுப்புக் காவலில் இருந்த காலம் பற்றி முரணான தகவல்கள் வெளியாகும் நிலையில் அவர், பிடிபட்ட தினமாக 2004 பெப்ரவரி 4 ஆம் திகதி குறிப்பிடப்பட்டிருப்பதோடு விடுதலையான திகதியாக 2004 டிசம்பர் 8 ஆம் திகதி பதிவாகியுள்ளது. பலூஜhவில் கைதுசெய்யப்பட் டிருக்கும் பக்தாதி பக்கா மற்றும் அட்டர் முகாம் உட்பட பல சிறைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பக்தாதியின் கைதி அடையாள அட்டையில் 'சிவில் கைதி' என்றே குறிப் பிடப்பட்டுள்ளது. அதாவது அவர் ஆயுதக் குழுக்களுடன் தொடர்பற்றவர் என்றே அமெரிக்க இராணுவம் அடையாளப்படுத்தியுள்ளது. பக்தாதி தம்மை கலீபாவாக பிரகடனம் செய்த பின்னர் பொதுமக்கள் முன் ஒருதடவையே தோன்றியுள்ளார். அவர் கடந்த ஜ_ன் மாதம் மொசூல் பள்ளிவாசலில் பிரசங்கம் நடத்தி இருந்தார். பின்னர் கடந்த நவம்பரில் பக்தாதி வெளியிட்ட ஓடியோ தகவலில் எரிமலை ஜpஹாத் ஒன்றுக்கு தமது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

2 comments:

  1. இது அமெரிக்கா மற்றும் யஹுதி சேர்ந்து ஆடுகின்ற நாடகம்

    ReplyDelete
  2. It is a well known fact that anti Islamic elements are behind this and this isa sign of Qiyama.

    ReplyDelete

Powered by Blogger.