Header Ads



பேஸ்புக் செயலிழந்ததற்கு காரணம் என்ன..? - நிர்வாகம் விளக்கம்

மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக் முடக்கப்பட்ட சம்பவம் உலகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது பாதிப்புக்கான காரணம் குறித்து அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இன்று காலை சுமார் ஒரு மணி நேரமாக பேஸ்புக் செயலிழந்த நிலையில் இருந்ததால் அனைவரும் டுவிட்டரை உபயோகித்தனர். அப்போது டுவிட்டரில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களை செயலிழக்க வைத்தது நாங்கள்தான் என்று லிசார்ட் ஸ்குவாட் என்ற குழு தெரிவித்தது.

இதை மறுத்துள்ள பேஸ்புக் நிர்வாகம், பேஸ்புக் செயலிழந்ததற்கு வெளி நபர்களால் நடந்த தாக்குதல் காரணமல்ல என்றும் உள் மென்பொருள் கோளாறே காரணம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் பேஸ்புக்கில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வந்தபோது அது பேஸ்புக்கின் உள்ளமைவு முறைகளை பாதித்ததே செயலிழப்பிற்கான காரணம் என்றும் விளக்கமளித்துள்ளது.

No comments

Powered by Blogger.