Header Ads



மைத்திரி அரசாங்கத்தில், முஸ்லிம் ஆளுநர்களுக்கு இடமில்லை - கிழக்கு ஆளுநராக ஒஸ்டின் பெர்ணாண்டோ

6 புதிய ஆளுநர்கள் இன்று 27-01-2015 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.

வட மாகாண ஆளுநராக, எச்.எம்.ஜீ.எஸ் பலிஹக்காரவும், கிழக்கு மாகாண ஆளுநராக ஒஸ்டின் பெர்ணாண்டோவும் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.

சப்ரகமுவ மாகாண ஆளுநராக டீ.எம்.ஏ.ஆர் பெரேராவும், மத்திய மாகாண ஆளுநராக சுரங்கனீ எல்லாவளவும் சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

பீ.பி திசாநாயக்க வட மத்திய மாகாண ஆளுநராகவும், சட்டத்தரணி எம்.பி.ஜயசிங்க ஊவா மாகாண ஆளுநராகவும் சத்திய பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேல், தென் மற்றும் வடமேல் மாகாண புதிய ஆளுநர்கள் கடந்த 23 ஆம் திகதி சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.

மேல் மாகாண ஆளுனராக கே.சி. லோகேஸ்வரனும், தென் மாகாண ஆளுனராக ஹேமகுமார நாணயக்காரவும், வடமேல் மாகாண ஆளுனராக அமரா பியசிரி ரத்நாயக்கவும் சத்திய பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடதக்கது.

6 comments:

  1. என்ன கூத்துடா இது.... ஒரு வகையில் இந்த செய்தித் தலைப்பும் இனவாதத்தை தூண்டுகின்றது என்றுதான் நினைக்கத் தோணுது..
    ஆழும் அரசில் பல முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர்... கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் அமைச்சர்கள் வருவர்.. கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் கதை அடிபடுகிறது.. ஆழுனராவது சின்ஹல சகோதர இனத்தில் இருக்க விடுங்களேன் பேரறிவாளர்களே..!!

    ReplyDelete
  2. we are trying to feed this community? what is the use of Governor ? we asked for SLMC

    ReplyDelete
  3. Governor post = peon; You have to do as what the President instructs you, the Governor does not act on his own or on the instructions of the Muslim community. We want the post that is performed on the instructions of the Muslim community. Do not include the governor post under the SLMC demanding list, that may compromise the Eastern Chief Minister.

    ReplyDelete
  4. முஸ்லிம்களாகிய நாம் தான் மிகப் பெரிய இனவாதிகளாக இருக்கின்றோம். இன ரீதியான பாகுபாட்டை கொண்டிராத எவரும் எம்மை ஆழ்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.

    ReplyDelete
  5. I am very sorry to say we (Muslim) are the number one racist in this dun-ya, May Allah Grant us good intention with other community

    ReplyDelete
  6. I do never expect these kinds of posts from Jaffnamuslim...
    I really disappointed with this racism news..

    ReplyDelete

Powered by Blogger.