Header Ads



தோல்வியடையும் ஜனாதிபதி வேட்பாளாருக்கு ரவூப் ஹக்கீம் உதவுவார் என நம்பவில்லை - விமல் வீரவன்ச

(அஸ்ரப் ஏ. சமத்)

 ஜரோப்பிய நாடுகள் ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு தடைகளை ரத்து செய்தமை தொடர்பாக அண்மையில் ஜரோப்பிய நாட்டுக்கு எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விஜயத்தின் வெளிப்பாடே இது. தேர்தல் காலத்தில் அவர் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று சில இரகசிய விடயங்களை செய்வது வழக்கம்.  ரணில்விக்கிரமசிங்க  ஜரோப்பா நாடுகள்  மட்டுமல்ல மலேசியாவுக்கும் சென்று அந்த நாட்டில் இயங்கும் விடுதலைப்புலிகளை சந்திக்க இருந்துள்ளார். என்பதை அரசாங்கம் அறிந்து வைத்துள்ளது. 

இன்று(19) பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது அமைச்சர் விமல் வீரன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அது மட்டுமல்ல ரணில் விக்கிரமசிங்க  பதவிக்கு வந்தால் வடக்கில் ஒர் ஆட்சியும் தெற்கில் ஒர் ஆட்;சியும் இல்லாமல் முழு இலங்கையிலும் 13வது சர்த்தை நடைமுறைப்படுத்துவதாக சொல்லியிருந்தார். அவருடைய காலத்தில்தான் வடக்கில் முழுமையாக ஆட்சியை புலிகளிடம் கையளித்திருந்தார். தெற்கில் ஓர் ஆட்சியும் நடைமுறையில்  இருந்தது. தற்பொழுது ஜனாதிபதியின் கீழ் ஒரு நாடு ஓர் ஆட்சி சகலருக்கும் சமமான அபிவிருத்திகள் நடைபெற்று வருகின்றன.

வடக்கில் ரீ.என்.ஏயின் உறுப்பிணர்  சிவாஜிலிங்கம் அண்மையில் கூறியிருந்தார். தமிழர்கள்  ஆதரவலிக்கும்  ஜனாதிபதி பதவிக்கு வந்தால் வடக்கில் உள்ள சகல புத்தர் சிலைகளும் அகற்றப்படுமாம் அத்துடன் ஒரு வாரத்திற்குள் வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றுவதாக கூறியுள்ளனர். 

ஆனால் பாராளுமன்ற உறுப்பிணர் சுமந்திரன் நீதிமன்றத்தின் ஊடாக ஈழம் அமைத்து நாட்டை பிரிவினைவாதத்ற்கு  எத்தணிக்கமாட்டோம் என சொல்லியிருந்தாலும் அவர்களது பெட்ரல் சுயாட்சி திட்டம் உள்ளது. இது இருதியில் பிரிவினைக்கே கொண்டு செல்லும்.

ஜே.வி.பியினர் அரச அதிகாரி ஜெனிவாவில் தூதுவர் ஆலயத்தை புரணமைக்கும்  கடதாசிகளை தூக்கிக்கொண்டு தாக்கின்றனர். ஆனால் ஜரோப்பிய ஒன்;றியம் விடுதலைப்புலிகளை பயங்கரவாத பட்டியலில் இருந்து ரத்துச் செய்தமை, சிவாஜிலிங்கத்தின் மேற்சொன்ன கதைகளுக்கு ஆகக் குறைந்தது ஒரு அறிக்கையைக் கூட வெளியிடவில்லை. அவர்களும் சர்வதேசத்தில் உள்ள விடுதலைப்புலிகளிளுடன் சேர்ந்துவிட்டனர்.

எமது கட்சி ஒருபோதும் தற்போதைய நிலைமையில் உள்ள ஜனாதிபதி முறைமை நீக்குதென்றால் இது தர்ணம் அல்ல முன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட பாராளுமன்றம் இன்னும் பதவிக்காலம் 2 வருடங்கள் உள்ளன. அதில் முழுநாட்டுக்கும் பூரணமானதொரு அரசியலமைப்பினை மாற்றுவதற்கே எமது கட்சி ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளது.

முழு உலகாலாரீதியில் மலேசியாவிலும், ஜரோப்பர்விலும் அமேரிக்காவில் ருத்திரக்குமாரன,; மற்றும் இமானுவேல், மற்றும் ராயப்பு ஜோசப் ஆகியவர்கள் கொண்ட கிரிஸ்த்துவ பாரதியார்கள் கொண்ட அமைப்பும் உலகலரீதியில் இலங்கையின் தற்போதைய அரசுக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக செயல்படுகின்றனர். 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது எமது கட்சியும் ஆதரவாளர்களும் இன்றில் இருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெற்றிக்கு தமது நாடுமுழுவதும் அர்ப்பணிக்கும். எமது கட்சி 2005, 2010 நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது யுத்த வெற்றி மற்றும் அபிவிருத்திக்கும் தொடர்ந்து மஹிந்த ராஜபக்சவுக்கே ஆதரவு தெரிவிப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஊடகவியாளார் கேள்வி – ரீ.என்.ஏ - ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் எதிர்காலத்தில் வட-கிழக்கு அரசியல்  மற்றும் தேர்தல்களின்போது ஒன்றினைந்து செயல்படுதவதற்கு பேச்சுவார்த்தை நடாத்தி ஒப்பந்தமொன்றைச் கைச்ச்சாத்திட உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றதே..?

அமைச்சர் விமல் பதில் - கடந்த இரண்டு ஜனாபதித் தேர்தலிலும் தோல்விபெற்ற ஜனாதிபதி வேட்பாளர்க்கே முஸ்லீம் காங்கிரஸூம் அதன் தலைமையும்  ஒன்று சேர்ந்து ஆதரவளித்தது. அதன் பின்  அந்த தவரை மீள செய்யமாட்டோம் எனச் சொல்லித்தான் ஜனாதிபதி மஹிந்தவிடம் வந்து  அரசில் அமைச்சர்களாகவும் பதவிவகித்து வந்து சேர்ந்தார்கள். 

மீண்டும் இந்த வரலாற்றுத் தவரை இழைக்க மாட்டார்கள் என நம்புகின்றேன். தமிழர் விடுதலைக் கூட்டணியுடன்  சேர்ந்து மீள முஸ்லீம்களை பழிக்காடாக்கி  தோல்விபெறும் ஜனாதிபதி வேட்பாளாருக்கு உதவுவார்.  ஏன்ற நிலைப்பாட்டுக்கு ரவுப் ஹக்கீமை போகமாட்டார் என நினைக்கின்றேன்.  ஆனால் ரீ.என்.ஏ யும் முஸ்லீம் காங்கிரசும்  இவ்வாறு செய்வார்கள் என ஏற்கனவே பல தடவைகள் அரசுக்கு சொல்லி வந்துள்ளோம். 

No comments

Powered by Blogger.