Header Ads



அமெரிக்க பாப் பாடலுக்கு நடனமாடிய ஈரான் இசைக் கலைஞர்களுக்கு தண்டனை

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில் தீவிர ஷரியா விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இங்கு பெண்களுக்கான கட்டுப்பாடுகள் மிகவும் அதிகம். கடந்த மே மாதம் நான்கு ஆண்களும் மூன்று பெண்களும் கொண்ட ஒரு இசைக்குழுவானது 'ஹேப்பி' என்ற அமெரிக்க பாப் இசைப்பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார்கள். 

சாலையின் நடுவே ஆடுவதுபோல் எடுக்கப்பட்டிருந்த அந்த வீடியோக் காட்சியில் தோன்றிய பெண்கள், இஸ்லாமிய ஆடைக் கட்டுப்பாட்டை மீறும் வகையில் உடை அணிந்திருந்தனர். இவர்கள் அனைவரும் அப்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். 

இதில் ஆறு பேருக்கு அவர்களுடைய அநாகரீகமான நடத்தைக்காக 91 கசையடிகளும் ஆறு மாத சிறைத் தண்டனையும் தீர்ப்பாக அளிக்கப்பட்டுள்ளதாக அவர்களின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள செய்தி ஒன்று நேற்று இணையதளத்தில் வெளிவந்துள்ளது.

மற்றொருவருக்கு அதிகபட்ச தண்டனையாக 91 கசையடிகளுடன் ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை வெளிவந்த ஈரான் வயர் என்ற நிறுவனத்தின் வலைத்தள செய்தி குறிப்பிட்டுள்ளது. 

ஆனால் இந்தத் தகவல்கள் தனக்கு முறையாக அறிவிக்கப்படாததால் தன்னால் இதுபற்றி உறுதியாகக் கூறமுடியவில்லை என்று அதில் அந்தக் கலைஞர் தெரிவித்துள்ளார். 

மேலும் இந்தத் தண்டனைகள் மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், மறுபடியும் இது போன்ற செயல்கள் நடக்குமேயானால் அப்போது இந்தத் தண்டனைகள் நிறைவேற்றப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

இந்த வலைத்தளம்  வெளியில் இருந்து செயல்படுவதாகும். 

மே மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து அமெரிக்கப் பாடகரும் அவரது ரசிகர்களும் தங்களின் எதிர்ப்பினை சமூக தளங்களின் வாயிலாக வெளிப்படுத்தியிருந்தனர். அதுமட்டுமின்றி ஈரானின் மிதவாத அதிபரான ஹசன் ருஹானியும் இந்த நடவடிக்கை குறித்த தனது கண்டனங்களை வெளியிட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 

No comments

Powered by Blogger.