அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெளிப்படையான பிரச்சாரம்..!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள நூற்றுக்கணக்கான பேருந்துகள் மற்றும் அங்குள்ள போக்குவரத்து பாதைகள், சப்வே-க்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான விளம்பரங்களை ஒட்டப்பட உள்ளது.
குறிப்பாக, சமீபத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் வாதிகளால் தலை அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலே, மற்றும் அவரை கொலை செய்த முகம் மறைக்கப்பட்ட தீவிரவாதி ஆகியோரின்
உருவப்படங்கள் அடங்கிய விளம்பரங்கள் இடம்பெற உள்ளன.
ஆனால், இந்த விளம்பரங்கள் அமெரிக்க அரசால் ஒட்டப்படுபவை அல்ல. அமெரிக்கன் ஃபீரிடம் டிபென்ஸ் இனிசியேட்டிவ் என்ற பெயரில் பமீலா ஜெல்லர் என்பவர் நடத்தி வரும் பிளாக்கர் வலைத்தளம் இதற்கு செலவு
செய்கிறது. உண்மையான இஸ்லாமியத்தையும், ஜிகாதியத்தையும் இந்த விளம்பர பிரச்சாரம் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்த போவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விளம்பரத்திற்கு மாநகர போக்குவரத்து நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பேற்க போவதில்லை. அனைத்து விளம்பரங்களும் எச்சரிக்கை முன்னறிவிப்புடன் ஒட்டப்படுகிறது. இந்த வலைத்தளம் ஏற்கனவே இஸ்ரேல் தொடர்பாக விளம்பரங்களை அண்மையில் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment