Header Ads



பலஸ்தீன பயங்கரவாதத்தை இஸ்ரேல் அழிக்க, இலங்கை ஆதரவாகவே இருக்கும் - டொனால்ட் பெரேரா

இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவரின் பேட்டி கண்டனத்துக்குரியது அரசாங்கம் உடனடியான விளக்கம் அளிக்க வேண்டும் - அஸாத் சாலி கோரிக்கை

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் காஸா மோதலில் இலங்கை அரசாங்கம் இஸ்ரேலை முழுமையாக ஆதரிக்கின்றது. இலங்கை இஸ்ரேலுக்கு மிகவும் நெருக்கமாக ஆதரவு வழங்கும் ஒருநாடாகும். பலஸ்தீன பயங்கரவாதத்தை இஸ்ரேல் பூண்டோடு அழிக்க வேண்டும் அதற்கு இலங்கை எப்போதும் ஆதரவாகவே இருக்கும் என்று இஸரேலில் உள்ள இலங்கைத் தூதுவரும் இலங்கையின் கூட்டுப் படைகளின் முன்னாள் தளபதியுமான டொனால்ட் பெரேரா இஸ்ரேலின் 'யெடியோத் அஹ்ரநோத்' என்ற பத்திரிகைக்கு அளித்துள்ள விஷேட பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தப் பத்திரிகை அந்த நாட்டில் ஆகக் கூடுதலான விற்பனையுள்ள அதிக அளவானோர் வாசிக்கும் ஒரு பத்திரிகையாகும்.

அரசாங்கம் மத்திய கிழக்கு நாடுகள் தொடர்பான தனது நிலைப்பாட்டை இலங்கை மக்களுக்கு தெளிவாக விளக்க வேண்டியதன் அவசியத்தை இந்தக் கருத்துக்கள் வலியுறுத்தி நிற்கின்றன என்று மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவருமான அஸாத் சாலி தெரிவித்துள்ளார். 

அவர் இது சம்பந்தமாக ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் ,

இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதுவர் பலஸ்தீன பிரதேசத்தின் வரலாறு தெரியாமல் உளரி இருக்கின்றார். பலஸ்தீனர்களை முழுமையாக பயங்கரவாதிகள் என்றும் இஸ்ரேல் அவர்களை முழுமையாக அழிக்கும் வரையில் ஓய்வின்றி தாக்குதல் நடத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளார். அந்தப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது பலஸ்தீனர்களுக்கு நிபந்தனையின்றி நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். அதை அவர்கள் ஏற்க மறுத்தாலோ அல்லது சரியாகப் பயன்படுத்த தவறினாலோ பயங்கரவாத இலக்குகள் முற்றாக அழித்தொழிக்கப்படும் வரை இஸ்ரேல் முழு அளவிலான யுத்தத்தை பிரயோகிக்க வேண்டும். அதற்காக இஸ்ரேல் தனது மக்களுக்கு விழிப்பூட்டி அவர்களுக்கு ஆபத்தை உணர்த்த வேண்டும். மக்கள் ஆதரவு இருந்தால் எப்பேற்பட்ட பயங்கரவாதத்தையும் அழிக்கலாம். அதன் பிறகு இஸ்ரேல் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழலாம்.

இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு யுத்தத்துக்கு இஸ்ரேல் பல்வேறு வழிகளில் உதவியுள்ளது. எமது விமானிகளுக்கு பயிற்சிகள் அழிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலிய யுத்த விமானங்கள் தாக்குதல் படகுகள் எனபன இன்னமும் எமது சேவையில் உள்ளன. கோடிக்கணக்கான டொலர் பணமும் எமக்கு உதவியாக வழங்கப்பட்டுள்ளன. இலங்கையர்கள் பலர் இஸ்ரேலை நேசிப்பவர்களாகவே உள்ளனர் என்றும் டொனால்ட் பெரேரா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தான் உலக வரலாறு தெரியாத ஒரு மடையன்; என்பதை டொனால்ட் பெரோர இந்தப் பேட்டி மூலம் உலகுக்கே பறைசாற்றியுள்ளார். யார் பயங்கரவாதி? சட்டவிரோதமாக ஆட்சி அமைத்தவர்கள் யார்? யாருடைய மண்ணை யார் கைப்பற்றி உள்ளனர்? யார் உண்மையான விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர்? 1948க்கு முன் உலக வரைபடத்தில் இஸ்ரேல் இருந்ததா? அல்லது பலஸ்தீனம் இருந்ததா? என்ற வரலாறு தெரியாமல் அவர் மடத்தனமாக உளரி இருக்கின்றார். 

எந்தத் தகுதியும் கல்வித் தகைமையும் இல்லாமல் உலக வரலாறு பற்றிய அரிச்சுவடி கூடத் தெரியாமல் வெறும் இராணுவ மூளை உள்ளது என்கின்ற ஒரே காரணத்துக்காக ஒருவரை தூதுவராக அனுப்பினால் அவர் இப்படித் தான் உளறுவார். குறைந்த பட்சம் ஒருவர் ஒரு நாட்டுக்கு தூதுவராக செல்கின்ற போதாவது அந்த நாட்டைப் பற்றியும் அந்தப் பிரதேச வரலாறை பற்றியும் மேலோட்டமாகவாவது படித்திருந்தால் டொனால்ட் பெரோரா இன்று இப்படி உளரி இருக்க மாட்டார்.

அவரின் உளரல் ஒருபறம் இருக்கட்டும். இந்த விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என்பது தான் இலங்கை முஸ்லிம்களின் கேள்வியாகும். ஜனாதிபதி முஸ்லிம்களுடனும் முஸ்லிம் நாடுகளுடன் நற்புறவு கொண்டவர் என்று ஓயாமல் இலங்கை வானொலி பறைசாற்றிக் கொண்டு இருக்கின்றது. மத்திய கிழக்கு நாடுகள் ஜனாதிபதியை அழைத்து உயர் விருதுகள் வழங்கி கௌரவிக்கின்றன. பலஸ்தீன ஒருமைப்பாட்டு இயக்கத்தின் தலைவர் ஜனாதிபதி என்று கூறப்படுகின்றது. பலஸ்தீனத்தில் அவரின் பெயரில் ஒரு வீதியே இருக்கின்றது. இவற்றுக்கொல்லாம் அர்த்தம் தான் என்ன? 

ஜனாதிபதி உள்நாட்டில் தான் இரட்டை வேடம் போடுகின்றார் என்றால் சர்வதேச அரங்கிலும் அவர் ஒரு மாபெரும் நடிகன் என்பதை டொனால்ட் பெரேராவின் பேட்டி நிருபிக்கின்றது அல்லவா? இது டொனால்ட் பெரேராவின் தனிப்பட்ட கருத்து என்று கூறி அரசாங்கம் தப்பிக்க முயலக் கூடாது. இவர் அங்கு ஒரு சுற்றுலா பயணியாக சென்று இந்த கருத்தைக் கூறவில்லை. எமது நாட்டின் தூதுவர் என்ற ரீதியிலேயே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். எனவே இவை எமது நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையோடு சம்பந்தப்பட்ட விடயம் என்றே நாம் கருத வேண்டியுள்ளது. அரசாங்கத்தோடு இணைந்திருக்கும் முஸ்லிம்களும் முஸ்லிம் கட்சிகளும் இந்த விடயத்தை உடனடியாக அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வந்து விளக்கம் கோர வேண்டும். டொனாலட் பெரேரா யாரின் உத்தரவைப் பெற்று இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அல்லது யாரை குஷிப்படுத்துவதற்காக அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார். அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ நிலைப்பாடும் இதுதானா? போன்ற விடயங்கள் அவசரமாக தெளிவு படுத்தப்பட வேண்டிய விடயங்களாகும்.

ஒரு வேளை இந்தக் கருத்துக்களோடு உடன்படவில்லை என்று அரசாங்கம் கூறினால் அதை நிரூபிக்கும் வகையில் டொனால்ட் பெரேராவை அரசாங்கம் திருப்பி அழைக்க வேண்டும். அவரின் கருத்துக்களோடு அரசாங்கம் ஒத்துப் போகவில்லையானால் இனிமேலும் அவர் இஸ்ரேலில் எமது தூதுவராக இருக்க எந்தத் தகுதியும் அற்றவராவார். எனவே அரசாங்கம் தனது நிலைப்பாட்டை நாட்டு மக்களுக்கு விரைவாக தெளிவு படுத்த வேண்டும்.

3 comments:

  1. குப்பை அள்ளுகிரவனை தூதுவராக அனுப்பினால் இதுதான் நடக்கும்.

    ReplyDelete
  2. அல்லாஹ் உன்னை கேவலப்படுத்துவானாக

    ReplyDelete
  3. Marathula thenga pichavanai thoozuvar akkinal Ippadithan pesuwan enna armiyil serndhavarhal nerayaper apidithan enna ulaha arivu gahakata pahai kiyapu kenek

    ReplyDelete

Powered by Blogger.