Header Ads



'அஸ்வரின் சாபம்...'

1983 இல் கறை படிந்த ஜூலையை உரு­வாக்கி அப்­பாவித் தமிழ் மக்­களைக் கொன்று குவித்து அவர்­களின் சொத்­துக்­களை சூறை­யா­டிய ஐக்­கிய தேசியக் கட்­சி­யிரோடு கூடிக்­கு­லா­வித்­தி­ரியும் தமி­ழினத் துரோ­கிகள் முஸ்­லிம்­க­ளுக்­காக நீலிக்­கண்ணீர் வடிக்கத் தேவை­யில்லை. இவ்­வாறு செயற்­ப­டு­வ­தற்கு அவர்­க­ளுக்கு வெட்­க­மில்­லையா? தமி­ழர்­களைக் கொன்று குவித்த ஐ.தே.க. மீது இடி விழ வேண்டும். என்று ஆளும் கட்சி எம்.பி ஏ.எச்.எம். அஸ்வர் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை அமர்வின் போது ஆளும் கட்­சியின் சாந்த பண்­டார எம்.பி.யினால் கொண்டு வரப்­பட்ட 1983 இல் வேலை இழக்கச் செய்­யப்­பட்ட அரச ஊழி­யர்கள் தொடர்­பி­லான சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அஸ்வர் எம்.பி இங்கு மேலும் கூறு­கையில்;

1983 ஜூலையில் ஐக்­கிய தேசியக் கட்சி தமிழ் மக்­கள்­மீது இனக்­க­ல­வ­ர­மொன்றை கட்­ட­விழ்த்­து­விட்டு நாடு முழு­வதும் தமிழ் மக்­க­ளைக்­கொன்று குவித்­தது. தமிழ் மக்­களே அன்று இலக்கு வைக்­கப்­பட்­டனர். அப்­பாவித் தமிழ் மக்­களின் வீடுகள் வர்த்­தக நிலை­யங்கள் கொள்­ளை­யி­டப்­பட்­டன அழிக்­கப்­பட்­டன.

யாழ். பொது நூலகம் எரிக்­கப்­பட்­டது. அன்று நடந்த இனப்­ப­டு­கொலைக் கல­வ­ரத்தை அன்­றைய ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்த்­தன ஒரு வார்த்­தையின் ஊடாக கட்­டுப்­ப­டுத்­தி­ருக்க முடியும். ஆனால், அதனை அவர் செய்­ய­வில்லை. அப்­ப­டி­யான ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இன்று கூடிக்­கு­லாவிக் கொண்­டி­ருக்­கின்ற தமி­ழினத் துரோகி­க­ளுக்கு வெட்­க­மில்­லையா.? நான் இந்த சபையில் தமிழ் மக்­க­ளுக்­காக குரல் கொடுக்கும் போது யோக­ராஜன் இடை­யூறு செய்­கிறார்.

தமி­ழினத் துரோ­கிகள் முஸ்­லிம்­க­ளுக்­காக இன்று நீலிக்­கண்ணீர் வடிக்­கின்­றனர் இவர்களைப் பற்றி முஸ்லிம் சமூகம் நன்கு அறியும். மேலும் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் மீது இடி விழ வேண்டும்என்றார்.

1 comment:

  1. Paavam nalla manishan bakir markarai theriyuma haji. Avar endha katchi enravazu theriyuma avarda golaya thane neenga neenga kunathil than pachondhi enru parthal shah... padathilum aze maziri irukinga haji vazha ungal arasiyal sanakkiyam

    ReplyDelete

Powered by Blogger.