Header Ads



பௌத்த தேரர்கள் வீதியில் இறங்கி போராடவேண்டி வரும் என எச்சரிக்கை


பௌத்த தேரர்கள் வீதியில் இறங்கி போராடவேண்டி வரும் என்று பொதுபல சேனா உள்ளீட்ட பேரினவாத அமைப்புக்கள் கண்டியில் வைத்து எச்சரிக்கை விடுத்தன.

பௌத்த சமயத்திற்கு பிற சமயங்களால் ஏற்பட்டுவரும் அச்சுறுத்தல், கசினோ சூதாட்டம், பாலியற் தொழில் வசதி உற்பட அனைத்து அனாச்சாரங்களுக்கும் அரசு முடிவு கட்டாவிட்டால் தேரர்கள் பாதையில் இறங்கிப் போராட வேண்டி வரும் என்று பொதுபல சேனா, ராவனா பலய, தேசிய சங்க சபை ஆகியவற்றின் பிரதி நிதிகள் இன்று 23-04-2014 மல்வத்தை மகா நாயக்கத் தேரரை சந்தித்த போது தெரிவித்தனர்.

பொது பல சேனாவின் செயலாளர் கலபொட அத்தேஞானசார தேரர், ராவனாபலயவின் செயலாளர் இத்தபானே சத்தாதிஸ்ஸ ஜாதிக சங்க சபையின் ரஜவத்தே வப்பஹிமி, ஆகியோர் இன்று(23.4.2014) மல்வத்தை மகா நாயக்கத் தேரர் திப்பட்டுவாவே சுமங்கள தேரரைச் சந்தித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

இதற்குப் பதில் அளித்த மல்வத்தை மகா நாயகத் தேரர் தெரிவித்தாவது-
சுக்தி மிக்க சங்க அமைப்பான தங்காளால் ஒரு அரசை உருவாக்கவும் முடியும். அதே போல் ஒரு அரசை விரட்டவும் முடியும். எனவே அது எங்கள் கையில் உள்ளது என்றார்.


No comments

Powered by Blogger.