Header Ads



இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பயணிக்கப்போகும் பாதை..!

(முஹம்மது காமில்)

உலக வரைபடத்தில் இலங்கை தீவானது ஆசியாக் கண்டத்தில், இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்து சமுத்திரத்தில் பூமத்திய ரேகைக்கு வடக்காக 6° 54′N  கிழக்காக 79° 54′E யில் நான்கு பக்கமும் கடலினால் சூழப்பெற்ற ஒரு அழகிய தீவாகும்.

இலங்கையின் அமைவும், செழிப்பும்,பௌதீக வளங்களும் காரணமாக இதனை "இந்து சமுத்திரத்தின் நித்திலம் (முத்து)" என வர்ணிப்பார்கள்.  அண்மைய குடிசன கணக்கீட்டின் படி கிட்டத்தட்ட 21 மில்லியன் மக்கள் வாழ்கின்றார்கள்.
முற்காலத்தில் பல்வேறுபட்ட புனைபெயரால் அழைக்கப்பட்டு வந்தாலும் பிரதானமாக உலகம் முழுவதும் Ceylon (சிலோன்) என்ற பெயரால் அழைக்கப்பட்டுவந்த  எமது நாடு 1972 ஆண்டு குடியரசான பின்னர் ஸ்ரீலங்கா என அழைக்கப்பெற்று வருகின்றது எம் அனைவருக்கும் பெருமையும் சிறப்பும் ஆகும்.

எமது இலங்கை திருநாட்டில் பௌத்த,இந்து,முஸ்லிம்,கிறஸ்தவ மற்றும் இன்னும் சில இனங்கள் வாளுகின்றபோதிலும் பெரும்பான்மையான இனமாக பௌத்த சமூகம் வாழ்ந்து வருவருது குறிப்பிடத்தக்கதாகும் இருந்த போதிலும் சில பிரதேசங்கள் தவிர்த்து எவ்வித முரண்பாடுகள் இல்லாமல் முஸ்லிம் சமூகமும் ஏனைய சமூகங்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

அதே நேரம் இலங்கையில் முஸ்லிம்களின் குடியேற்றம் முதன் முதல் எப்போது எவ்வாறு நிகழ்வுற்றது என்பதனை சரியாகக் கணித்துக் கூற முடியாத போதிலும் இலங்கையில் இஸ்லாத்தின் பரவலுக்கு வழிகோலிய அறேபியர் கிறுஸ்துவுக்கு முற்பட்ட காலம் முதல் இலங்கையுடன் வர்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் என்பதை அறிய முடிகிறது.

இலங்கையின் வரலாறுகளை உற்றுநோக்கும் போது பண்டைக்கால வர்த்தக தொடர்புகளின் கேந்திர நிலையமாக இலங்கை இருந்துவந்தது தெள்ளத்தெளிவாக விளங்குகின்றது அரேபிய வர்த்தகத்தை பொருத்தமட்டில் மூன்று புறத்திலும் நீண்ட கடற்கரையோரங்களைக் கொண்டிருந்த அறேபியா தனது மேற்கெல்லையில் நாகரிக வளர்ச்சியும் பொருளாதார வளமும் கொண்டிருந்த எகிப்துடனும், கிழக்கு எல்லையில்  பல்வேறு துறைகளிலும் நன்கு வளர்ச்சி கண்டிருந்த பாரசீகத்துடனும் வர்தகத்தொடர்பைக் கொண்டிருந்தது. பாரசீகத்துடனான வர்தகத் தொடர்பு கடற்பாதை மூலமே நடைபெற்றது. ஏடன் துறைமுகத்தூடாகவும், பாரசீகத்தின் கரையோரமாகவும் அவர்கள் கொண்டிருந்த வர்தகத் தொடர்பு இந்தியாவுக்கு அவர்கள் செல்லவும் வழிகோலியது.மத்திய தரைக்கடல் நாடுகளுக்கும் இந்தோனேசியா வரை சென்ற கிழகாசிய நாடுகளுக்குமிடையிலான வர்தகப்பாதயை அவர்கள் இணைப்பவர்களாக இருந்தனர். இப்பாதையின் மத்தியில் இலங்கை அமைந்திருந்ததால் இஸ்லாத்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே அறேபிய வர்தகர் இலங்கையுடன் தொடர்புகொண்டிருந்தனர் என்பது யாரும் முற்றிலும் மறுக்கமுடியாத உண்மையாகும் இவர்களால்தான் இலங்கை இந்து சமுத்திரத்தின் நித்திலம் சொர்க்காபுரி என்றெல்லாம் அழைக்கப்பட்டது இதன் காரணத்தினால்தான் பின்னாட்களில் போத்துக்கீசரும்,ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் இலங்கையை கைப்பற்றி மாறி மாறி ஆட்சிபுரிந்து வந்தனர்.

ஆனால் தற்காலத்தில் 30 வருட இனப்பிரச்சினை மற்றும் கொடிய யுத்தத்திற்கு பின்னரான எமது நாட்டில் தோன்றி இருக்கின்ற பௌத்த பேரினவாத அமைப்புகள் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் பற்றி மிகத் தவறான கருத்துகளை பெரும்பான்மை சமூகத்துக்கு முன்வைத்து முஸ்லிம் சமூகத்தை பற்றி கட்டுக்கதைகள்,பெறாமை போன்றனவற்றை தமது காழ்ப்புணர்ச்சியுடன் வெளிப்படுத்துகின்றன.உண்மையில் இலங்கை வரலாற்றினை புரட்டிப்பார்க்கும்போது முஸ்லிம்கள் பற்றிய வரலாறுகளை அறிந்து கொள்ளலாம் அப்படியிருந்தும் வேண்டுமென்றே ஒரு சமூகத்தின் மேல் கொண்ட அதீத வெறுப்பு மற்றும் காழ்ப்புணர்ச்சி வரலாறுகளைக்கூட மாற்ற நினைக்கின்றது என்பதை  எமது இலங்கை தீவில் சமீப காலமாக நடைபெற்றுவரும் சம்பவங்களும் முஸ்லிம் சமூகத்து எதிரான அத்துமீறல் களும் எடுத்துக்காட்டுகின்றன.

இலங்கையின் சுதந்திரத்திற்கான போராட்டங்கள் முதல் இலங்கையின் அரசாங்கங்களை நிர்ணயிப்பது வரை முஸ்லிம் அரசியல் வாதிகளின் ஈடுபாடும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவமும் மிக முக்கியமானதாகும்.இலங்கைக்கான சுந்தந்திர பிரகடன செய்திகளைப் படிக்கும் போது அப்போது கலத்தில் இருந்த தலைவர்களாக நமது மூத்த அரசியல்வாதிகளாக பலர் திகழ்ந்திருக்கிறாகள். குறிப்பாக சேர். ராஸிக் பரீத், டாக்டர் பதியுத்தீன் மஹ்மூத், எம்.ஸீ.எம். கலீல் மற்றும் டாக்டர் டீ.பி. ஜாயா போன்றவர்கள் மிக முக்கியமானவர்களாகும்.

1990 களின் பிற்ப்பாடு இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லிம்களின் பங்கானது சரித்திரத்தில் பொறிக்கப் படவேண்டியதே 1994 ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல் இதற்க்கு உதாரணமாகும் ஆட்சியை தீர்மானிக்க கூடிய தகுதிபெற்ற ஒரு பெரும் பங்காளிக் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிராஸ் வலுப்பெற்றது. தனது பேரம் பேசும் சக்திமூலம் ஆட்சிய அமைக்க உதவிய முஸ்லிம்காங்கிரசையும் முஸ்லிம்களையும்  பௌத்த அடிப்படைவாதிகள் காழ்ப்புணர்ச்சியுடன் உற்று நோக்க தொடங்கியது இதிலிருந்துதான் இவர்களின் இந்த காழ்ப்புணர்ச்சியானது அரசியலுக்கு அப்பாற்பட்டு இன்று எமது அடிப்படை உரிமைகளில் கூட கைவைக்குகின்ற நிலைமைக்கு தள்ளப்பட்டது எமது துரதிஸ்டமே. இதற்க்கெல்லாம் காரண கர்த்தாக்கள் யார் யாரும் சிந்தித்த துண்டா? நிச்சயமாக இல்லை..!!

நம்மை பிரதிநித்துவப்படுத்தும் அரசியல் வியாபாரிகள்தான் மூல காரணம். தமது தேவைகளுக்காக எமது சமூகத்தை அடகுவைத்து ஆட்சியில் அமர்ந்த இவர்கள் இன்று அரச சலுகைகளுக்காகவும் ஆடம்பரங்களுக்காகவும் சமூகத்தை மறந்து எமது சமூகத்துக்கு எதிராக நடைபெறும் அவலங்களை தட்டிக்கேட்க முடியாமல் பொந்துக்குள் ஒளிந்து கொண்டு கபட நாடகம் நடத்திக்கொண்டு இருப்பதால் வந்தவினையே அன்றி வேறில்லை.

இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி அரசியல் எமது அரசியல் தலைமைகள் என்றாவது சிந்திக்குமா?

ஏனெனில் அரசியல் தலைவர்களை மட்டும் சமூக பொறுப்புக்களை கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதற்கல்ல, சிலரை குறைகூற வேண்டும் என்கின்ற தவறான எண்ணமும் அல்ல. காலத்துக்கு காலம் எமது முஸ்லிம் சமூகம் பல்வேறுபட்ட மரண அடிகளையும் பழிவாங்கல் களையும் அனுபவித்துவந்துள்ளது இதற்க்கு வரலாறுகள் சான்றாகும் அதனை தவிர்ப்பதற்காகத்தான் இதெல்லாம் காரணம் இவ்வாறான பிரச்சினைகள் தோன்றியதன் மூலம் எமது சமூகத்தில் இருந்த பல உயிர்கள் எம்மை விட்டு அகலச் செய்துள்ளது பல பணக்காரர்களை சொத்துக்களை இழந்து  பிச்சைகாரர்களாக மாற்றி இருக்கின்றது, பல முஸ்லிம் கல்விமான்களை இழக்கச் செய்திருக்கின்றது. பல பிரதேசங்களை துறக்கச் செய்திருக்கின்றது.

பலரை அநாதையாக, அகதியாக மாற்றி இருக்கின்றது. இதற்க்கு சாட்சியாக தமிழ் பயங்கரவாதம் மூலம் ஏறாவூர், காத்தான்குடி, அழிஞ்சிப் பொத்தானை, பங்குராணை, மூதூர்,வடகிழக்கு என்று பல பிரதேசங்களில் நடைபெற்ற இன அழிவுகளும் இழப்புக்களும் இருக்கின்றன.

1990 களின் முற்பகுதில் யாழ்பாணத்தில் இரவோடிரவாக துரத்தப்பட்ட முஸ்லிம் மக்கள் இன்றும் கூட அனாதைகளாக எமது நாட்டின் பலபாகங்களிலும் நிரந்தர வதிவிடமில்லாமல் பல்வேறுபட்ட இன்னல்களை அனுபவித்துக்கொண்டு வாழ்கின்றனர் என்பது யாவரும் அறிந்த உண்மையே ஒரு சமூகத்தை அழித்து இன்னொரு சமூகம் வெற்றி பெற்ற வரலாறுகள் உண்டா?? சற்று சிந்தித்து பாருங்கள் நிச்சயமாக இல்லை தமிழ் சமூகத்துக்காக முஸ்லிம் சமூகத்தை விரட்டியடித்த விடுதலைப்புலிகள் கண்ட அடைவு என்ன?? நிச்சயமாக ஒன்றுமில்லை  இலட்சோப இலட்சம் தமிழ் உறவுகளை யுத்தத்தின் பெயரால் இழந்ததுதான் மிச்சம் வேறொன்றுமில்லை. அதே போன்றதொரு நிகழ்வை இன்றுள்ள பௌத்த பேரினவாத அமைப்புகளான பொது பல சேனா மற்று ராவாய போன்ற அமைப்புகள் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான வன்முறைகள்,தடை உத்தரவுகளை பிறப்பித்து முஸ்லிம் சமூகத்தை ஆயுத போராட்டம் என்ற வன்முறைக்குள் சிக்கவைத்து கருவறுக்க நினைக்கின்றன. இதுபல்வேறு சம்பவங்கள் மூலம் ஊர்ஜிதமாகின்றன.

இத்தனைக்கும் அரசாங்கமும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் வெறுமனே வேடிக்கை பார்ப்பது எதனாலோ?? என்று கேள்வி எமது சமூகத்துக்கு எழுகின்றது அப்பாவி முஸ்லிம்களை காவு வாங்க நடைபெறும் இச் சதிக்கு பக்கபலமாக அரசியல் பெரும் புள்ளிகள் பின்னணியில் உள்ளதோ என்று எண்ணத்தோன்றுகின்றது 30 வருடத்துக்கு மேல் நீடித்த புலிப்பயங்கரவாதத்தை முறியடித்து சுபீட்சமான வாழ்வை மக்களுக்கு ஏற்ப்படுத்தி தந்த இந்த அரசாங்கம் முஸ்லிம்கள் தொடர்பில் எழுகின்ற இந்தப் பிரச்சினைகளை வாய் மூடி மௌனமாக உற்றுநோக்குவதன் பின்னணி என்ன??

ஒன்றுமட்டும் ஊர்ஜிதமாக விளங்குகின்றது பௌத்த பேரினவாத சக்திகள் பர்மாவில் இடம்பெற்றது போன்று ஒருசம்பவத்தை இங்கு அரங்கேற்றி முஸ்லிம்கள் தங்களை தாமே தற்காத்துக்கொள்ள நினைக்ககூடிய ஒரு மனோநிலையை முஸ்லிம்களின் மத்தியில் உருவாக்கி அதன் பின்னர் ஆயுதத்காலச்சாரத்தையும் முஸ்லிம்கள் மத்தியில் தோற்றுவித்து பின்னர் இனவழிப்பு செய்வதற்கான நடைமுறை ஒன்றை தோற்றுவிப்பதற்கான செயர்ப்படுகளாக அண்மைக்கால சம்பவங்கள் எமது நாட்டில் நடைபெற்று வருகின்றனவோ என்று சிந்திக்க தோன்றுகின்றது.
இதில் முதல்கட்டமாக முஸ்லிம்களின் கலாச்சார சின்னங்கள், மற்றும் பள்ளிவாயல்கள் அழிக்கப்பட்டு வருகின்றமையும் பின்னர் முஸ்லிம்களின் ஹலால் நடைமுறையில் கைவைத்தமையும் அதேநேரம் தற்போது முஸ்லிம் பெண்கள் அணியும் நிஹாப் விடயத்தில் தனது கவனத்தை செலுத்தி சமூகத்தை குழப்ப நினைக்கும் பொதுபலசேனா மற்றும் ராவாய தீவிர வாத அமைப்புகளின் சதிக்குள் நாம் சமூகத்தை சிக்கவைக்க நடைபெறும் சூழ்ச்சியே இதுவாகும்.

இத் தருணத்தில் எமது சமூகம் செய்யவேண்டியதென்ன!!

இன் நாட்டில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக நடைபெறுகின்ற நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற அத்துமீறல் சம்பவங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் முழுதும் ஆவணமாக்கப்பட்டு சர்வேதேசத்தின் பார்வைக்கு கொண்டுசெல்வதின் மூலம் சரியான தீர்வினைப் பெறலாம் மாறாக இவர்களின் சதிவலையில் நாம் அகப்பட்டு கிளர்ந்தெழுவோம் என்றால் முஸ்லிம் தீவிர வாதிகள் முத்திரை குத்தப்பட்டு எமது சமூகத்தையே கருவருப்பதர்க்கான வாய்ப்பை  நாமே அவர்களுக்கு வழங்கியது போலாகிவிடும் இதை ஒருபோதும் நாம் இவர்களுக்கு வழங்குதல் கூடாது.

எமது சமூகமே நீ இன்னும் மௌனமாக இருப்பது ஏனோ!!
இது தனி நபருக்கான பிரச்சினை அல்ல ஒரு சமூகத்தின் பிரச்சினை இதை எம்மை படைத்து பரிபாலிக்கும் எல்லாம் வல்ல இறைவன் நன்கறிந்தவன் எனவே பிரச்சினைகளைஅவனிடம் எத்திவையுங்கள் அதற்க்கான தீர்வை எல்லாம் வல்ல இறைவன் எமக்கு தந்தருளுவான் நாம்  மார்க்க பிரிவினை வாதங்களுக்கு அப்பால் ஒரே முஸ்லிம் சமூகம் என்ற அமைப்பில் ஓன்று படவேண்டிய தருணம் இது எமது சமூகத்தின் விடிவுக்காக பிரார்த்தனைகள் மற்றும்  துஆக்களை அதிகப்படுத்துங்கள் எல்லாம் வல்ல இறைவன் இலகுவாக்கித்தருவான்.

யா அல்லாஹ், எமது முஸ்லிம் சமூகம் பிரிவினை வாதிகளாலும் அவர்களின் காழ்ப்புணர்ச்சி யாலும் பல்வேறுபட்ட இன்னல்களையும் கொடுமைகளையும் அனுபவித்து வருகின்றதை நீ நன்கறிவாய் இவர்களின் சூழ்ச்சியில் இருந்து எமது சமூகத்தை நீ பாதுகாத்து அருள்புரிவாயாக.எமது சமூகத்தின் இருப்பை நிலைநிறுத்தி அருள் புரிவாயாக!

ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
அல்ஹம்துலில்லாஹ், புகழ் அனைத்தும் அல்லாஹுவுக்கே.!!

2 comments:

  1. நிச்சயமாக 1985 முதல் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட வன்முறைகளை ஒன்று சேர்த்து முஸ்லிம் நாடுகளுக்கும் சர்வதேசத்தின் கவனத்திற்கும் கொன்டு வந்தால் தான் எமது அவள நிலையை கண்டு கொள்வார்கள். முஸ்லிம்கள் முஸ்லிம்களாக நினைத்தபடி அவர்களது மார்க்க காரியங்களை தடை இன்றி நிறைவேற்ற அருள் புரிவானாக ஆமீன் ஆமீன்..ஆமீன்

    ReplyDelete
  2. நிச்சயமாக 1985 முதல் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட வன்முறைகளை ஒன்று சேர்த்து முஸ்லிம் நாடுகளுக்கும் சர்வதேசத்தின் கவனத்திற்கும் கொன்டு வந்தால் தான் எமது அவள நிலையை கண்டு கொள்வார்கள். முஸ்லிம்கள் முஸ்லிம்களாக நினைத்தபடி அவர்களது மார்க்க காரியங்களை தடை இன்றி நிறைவேற்ற அருள் புரிவானாக ஆமீன் ஆமீன்..ஆமீன்

    ReplyDelete

Powered by Blogger.