Header Ads



அமெரிக்காவில் சிறுவனின் கால் மூட்டுக்குள் வளர்ந்த நத்தை

அமெரிக்காவில் சிறுவனின், கால் மூட்டுக்குள் வளர்ந்த கடல் நத்தை, தற்போது வெளியே எடுக்கப்பட்டு, மீன் தொட்டியில் வளர்க்கப்படுகிறது.

அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தின், ஆரஞ்ச் கவுன்டி பகுதியை சேர்ந்தவர் ராச்சல். இவரது மகன் பால் பிராங்ளின்,4. கடந்த மாதம், வீட்டருகே உள்ள புல்வெளியில் பிராங்ளின் விளையாடி கொண்டிருந்த போது, கீழே விழுந்ததில், கால் மூட்டில் காயம் ஏற்பட்டது. இதை சரியாக கவனிக்காததால், மூன்று வாரத்துக்கு பிறகு, சிறுவனின் மூட்டு வீங்கியது. புண்ணில் சீழ் பிடித்து கொண்டதால், சிறுவனின் மூட்டை அழுத்தி, சீழை வெளியேற்றினார் ராச்சல். அப்போது, கல் போன்று ஒன்று வெளியேறியது. அதன் பின் அது தானாக நகர துவங்கியது. அப்போது தான், அது கடல் நத்தை என்பதை ராச்சல் கண்டுபிடித்தார். அந்த நத்தையை கழுவி தற்போது, மீன் தொட்டியில் வளர்க்கிறார். புல்வெளியில் கிடந்த நத்தையின் முட்டை, சிறுவனின் காலில் ஏற்பட்ட காயத்தின் வழியாக உள் சென்று வளர்ந்து, நத்தையாக வெளியேறியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

No comments

Powered by Blogger.