Header Ads



முஸ்லிம் ஆலோசனை சபை உருவாகியது...!


முஸ்லிம் இயக்க பிரதிநிதிகளையும் சமூக ஆர்வலர்களையும் கொண்ட அரசியல் கலப்பற்ற முஸ்லிம் ஆலோசனை சபை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்துமுகமாக முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா ஏற்பாடு செய்த கூட்டமொன்றில் உலமாக்கள், முஸ்லிம் இயக்கப்பிரதிநிதிகள், வர்த்தகர்கள், கல்விமான்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் ஆகியோரைக்கொண்ட ஆலோசனை சபை ஒன்று உருவாக்கப்பட்டது.

எழுபத்தைந்துக்கும் அதிகமான முக்கியஸ்தர்களைக்கொண்ட இச்சபை, முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கான குறுகிய கால, இடைக்கால, நீண்டகால திட்டங்களை வகுத்து செயல்படவுள்ளதோடு நாட்டில் சமாதான சக வாழ்வுக்காகவும் பாடுபடும்.

முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் இக்கூட்டத்தில் உரையாற்றும்போது, தற்போது முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு முகம் கொடுக்கும் அதே வேலை, எமது தனித்துவத்தை காத்துக்கொண்டு, ஏனைய சமூகங்களுடன் இணைந்து நாமும் இலங்கையர் என்ற அடையாளத்தை பதிக்க வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா என்பது ஐம்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் இயக்கங்களை உள்ளடக்கிய ஒரு சங்கமாகும். கடந்தகாலங்களில் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய பல சவால்களுக்கு முகம் கொடுத்து, நிரந்தர தீர்வினை பெறுவதற்காக அரசியல் உயர் மட்டங்களிலும், மத குருக்களுடனும் மற்றும் முக்கிய பிரமுகர்களுடனும் பேச்சு வார்த்தை நடாத்தி இனங்கள் மத்தியில் சுமுக உறவினை ஏற்படுத்துவதற்கு பாடுபட்டு வருவது அறிந்ததே.

8 comments:

  1. மாஷா அல்லாஹ்...மிக்க மகிழ்ச்சி. முஸ்லிம் ஆலோசனை சபையின் தூய்மையான நோக்கங்கள் நிறைவேற எல்லாம் வல்ல அல்லாஹு தஆலாவை இறைஞ்சுகிறேன்!

    ReplyDelete
  2. முயற்சி வெற்றிபெற அல்லாஹ் அருள் பாளிப்பனாக!

    ReplyDelete
  3. சமூக அங்கீகாரம் அவ்வளவு எளிதில் கிடைக்காது? முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கே அவரது பிறந்த ஊரிலேயே அங்கீகாரம் கிடைக்க 20 வருடங்கள் எடுத்தது. எனவே தியாகம் செய்ய தயாராக இருக்கிறார்களா இந்த முக்கியஸ்தர்கள்?

    ReplyDelete
  4. ungal karuthum eathirparpum niyayamanade, anaal neengalum,nanum eam sakotharangalume inda samooham.

    ReplyDelete
  5. அவசரப்பட்டு ஒரு முடிவிற்கு வந்து விடாதீர்கள், இந்த சபையின் பெயர், யாப்பு, தலைவர், செயலாளர், முக்கிய தீமானம் எடுக்கும் உறுப்பினர், எந்த வகையில் இந்த சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர் இவர்களின் அரசியல் சார்புத்தன்மை,போன்ற பல கோணம்களில் சிந்தித்து இவர்கள் தகுதியானவர்கள், முஸ்லிம் சமூகத்தை விலை பேசி குடும்பம் நடத்த மாட்டார்கள் என்ற நம்பிக்கை பெரும்பான்மையான முஸ்லிகளின் மனதில் ஏற்படும் வரை சமூகத்தை பற்றி சிந்திக்கின்ற எந்த முஸ்லிமும் நிம்மதிப்பெருமூச்சு விடமுடியாது!

    ReplyDelete
  6. நல்ல முயற்சி! வெற்றி பெற வாழ்த்துக்கள்!! சூறா சபையின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உறுப்பினர்களைப்பற்றிய விவரங்கள் எப்போது வெளியாகும் என இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.

    ReplyDelete
  7. இவ்வமைப்பின் அதிகாரம் எவ்வாறு பெறப்பட்டது. அரசின் அடிவருடிகள் உள்வாங்கப்பட்டால் (அஸ்வர், காதர்) இதன் குரலே செல்லாக்காசாகி விடும். பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற கதையாகிவடும்.

    ReplyDelete
  8. இலங்கையில் உள்ள பலவேறு இஸ்லாமிய முஸ்லிம் அமைப்புக்களும் தமக்கென ஆலோசனை சபைகளை கொண்டிருப்பது போல இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் தமக்கென ஒரு ஆலோசனை சபையை நிறுவியுள்ளமை வரவேற்கத் தக்கது.

    மேற்படி சகல அமைப்புக்களையும் அரவணைத்து தலை நகரோடும் அமைப்புக்களோடும் மாத்திரம் மட்டுப் படுத்தப் படாத நாட்டின் உயர் மட்டத்திலிருந்து கிராம மட்டம் வரையிலான தேசிய ஷூரா சபைக்கான முன்னெடுப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன அல் -ஹம்துலில்லாஹ்.

    அதன் கட்டமைப்பு வடிவம், தெரிவு முறைகள் ,தகைமைகள் , அதன் கீழ் வரும் குழுக்கள் ,அதன் செயலகம், அதன் பொறுப்புக் கூறும் வெளிப்படையான தன்மைகள் போன்ற இன்னோரன்ன விடயங்கள் இன்னும் ஆராயப் பட்டு வருகின்றன.

    ReplyDelete

Powered by Blogger.