Header Ads



இவ்வருட தேசிய மிலாத் தின அங்குரார்ப்பண விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை


(ஏ.எஸ்.எம்.ஜாவித்) 

இவ்வருட தேசிய மிலாத் தின அங்குரார்ப்பண விழா எதிர்வரும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கிண்ணியா மத்திய மஹா வித்தியாலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் பிரதமர் தி.மு.ஜயரத்ன அவர்களின் ஆலோசனையுடன் புத்தசாசன மற்றம் மத அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தணவினதும் கிழக்குமாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, ரவுப் ஹக்கீம், மாகாண அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா , அமைச்சர் றிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அஷ்ஷெய்யத் அலவி மௌலானா, கிழக்கு மாகாண ஆளுநர் றியல் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம, பிரதி அமைச்சர்களான எம்.எல்.ஏ.எல்.ஹிஸ்புல்லா, சுஸந்த புஞ்சிநிலமே, ஏ.ஆர்.எம்.அப்துல் காதர், பைஸர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் ஆகியோரின் பங்களிப்புடன் இவ்வருட தேசிய மீலாத்விழா அங்குரார்ப்பண விழா கொண்டாடப்படவுள்ளது.

மேற்படி நிகழ்வின்போது நடந்து முடிந்த தேசிய மீலாத் விழா போட்டிகளில் பங்கபற்றி வெற்றி பெற்ற மாணவர்களில் ஒவ்வொருபோட்களிலும் தமது திறமைகளை வெளிப்படுத்திய முதல் வெற்றியாளர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. கனம் பணிப்பாளர் அவர்களே! இந்த பித் அத்தான விடயத்துக்கு ஏன் துணைபோறிங்க சமூகத்துக்கு இதுவா முக்கியம்?

    ReplyDelete

Powered by Blogger.