Header Ads



ஞானசாரரின் காவி ஆடை கழற்றப்பட்டமை, ஜனாதிபதியின் நிலைப்பாடு இன்று பகிரங்கமாகும்


சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஞானசார தேரர், சாதாரண உடைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை தொடர்பில் இன்று -8- ஜனாதிபதிக்கும், முப்பீடங்களினதும் மகாநாயக்க தேரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மகா சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது. 


நீதிமன்றத் தீர்ப்பிற்கு அமைவாக  சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு முப்பீடங்களினதும் மகாநாயக்க தேரர்களால் அனுப்பப்பட்ட கடிதம் குறித்து கலந்துரையாடுவதற்காகவே இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 


இதற்கமைய, குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 1:00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

No comments

Powered by Blogger.