ஞானசாரருக்கு மீண்டும் தண்டனை, சந்தியாவுக்கு மிரட்டல்
தனக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல்கள் குறித்து ஹோமாகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு முறைப்பாடு செய்து ஜனாதிபதி, நீதி அமைச்சர் மற்றும் பொலிஸ் திணைக்களம் தனது பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
2016 ஜனவரி 25 அன்று ஹோமாகம நீதிமன்றில் பிரகீத் எக்னலிகொட வழக்கின் சந்தேகநபர்களான 6 இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதிமன்றிற்குள் புகுந்த ஞானசாரர் நீதிபதி மற்றும் அரசு சட்டத்தரணிகளை மிக மோசமான வார்த்தைகளால் ஏசியதுடன், சந்தியா எக்னலிகொடவையும் நேரடியாக அச்சுறுத்தினார்.
நீதிபதியை அவமதித்தமை மற்றும் தமக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் தொடரப்பட்ட வழக்குகளின் அடிப்படையிலேயே ஞானசார தேரருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது எனவும், மாறாக அவர் தீவிரவாதத்திற்கு எதிராகப் பேசியதற்காகச் சிறை செல்லவில்லை எனவும் சந்தியா எக்னலிகொட தெளிவுபடுத்தியுள்ளார்.

Post a Comment