அனோஜனை மன்னிப்பின் அடிப்படையில் சவூதி அரசும், மன்னரும் விடுதலை செய்ய வேண்டும்
இலங்கை இந்து அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமை (4) ஆரம்பமானது.
இப்போராட்டம் குறித்துக் கருத்துத் தெரிவித்த இலங்கை இந்து அமைப்புக்களின் கூட்டமைப்பின் செயலாளர் கலாநிதி என். கே. எஸ். திருச்செல்வம், கொழும்பில் வாழும் மூவின மக்களும் நேரில் வருகை தந்து இந்த அமைதி வழிப் போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இவ்வாறு பெறப்படும் கையெழுத்துக்களை உள்ளடக்கிய மகஜர் தயார் செய்யப்பட்டு, இலங்கை அரசு, சவூதி அரேபிய அரசு, இந்திய அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை (UN) போன்ற சர்வதேச அமைப்புகளுக்கும் முறைப்படி கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஓர் இளைஞனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, கட்சி மற்றும் மத வேறுபாடுகளின்றி அனைத்து மக்களும் திரண்டு வந்து ஆதரவு வழங்குமாறு அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Post a Comment