யாழ்ப்பாணத்தில் சோகம்
யாழ்ப்பாணத்தில் நல்லூர், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினில் அத்துமீறி நுழைந்த இளைஞன், வீட்டில் இருந்த யுவதியை கூரான ஆயுதத்தால் தாக்கியதில் அந்த யுவதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது குறித்த யுவதியின் தாயாரும் கூரான ஆயுதத்தால் தாக்கியதில் படுகாயமடைந்துள்ளார்.
சம்பவத்தின் பின் குறித்த நபரும், உயிர் மாய்த்துக் கொண்டான்.
சம்பவத்தில் படுகாயமடைந்த தாயார், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment