மதரஸா மாணவர்களிடம் பொலிஸ் அதிகாரி கேட்ட கேள்வி
எனது உரையின் போது, நாட்டின் பொதுச் சட்டம் தொடர்பான அடிப்படை அறிவும், ஒழுக்கத்தின் முக்கியத்துவமும் குறித்து மாணவர்களுடன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன்.
மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடனும் கவனத்துடனும் எனது உரையை கேட்டதுடன், உரையின் இறுதியில் அவர்கள் எழுப்பிய கேள்விகளும் மிகவும் சுவாரஸ்யமானதும் சிந்திக்கத் தூண்டும் வகையிலும் அமைந்திருந்தன.
உரையின் முடிவில், “எதிர்காலத்தில் பொலிஸ் சேவையில் இணைந்து பணியாற்ற விரும்புபவர்கள் யார்?” என நான் கேட்டபோது, எனது எதிர்பார்ப்பையும் மீறி, பங்கேற்ற மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்களது கைகளை உயர்த்தினர்.
அவர்களின் முகபாவனைகளை உன்னிப்பாகக் கவனித்தபோது, பொலிஸாருடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ளவும், பொலிஸ் சேவையைப் பற்றி அறிந்துகொள்ளவும் அவர்களிடம் காணப்பட்ட உண்மையான ஆர்வத்தை தெளிவாக உணர முடிந்தது.
Sujith Wedamulla

Post a Comment