ஈரானிய மாலுமிகளிடமிருந்து உருக்கமான கோரிக்கை - செவிமடுக்குமா இலங்கை அரசாங்கம்..?
இலங்கை கடற்பரப்புக்கு அருகில் சிக்கியுள்ள ஈரானிய எண்ணெய் தாங்கி கப்பல்களுக்குத் தேவையான அத்தியாவசியச் சேவைகளை வழங்கினால், இலங்கை மீது தடைகள் விதிக்கப்படலாம் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளதாக அமெரிக்காவின்' (The Wall Street Journal) செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக அமெரிக்க அதிகாரிகள் இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கடல்சார் முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகள் காரணமாக, இலங்கையின் தென்மேற்கு கடற்கரையில் இருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் 20 வெற்று ஈரானிய எண்ணெய் தாங்கி கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன.
இந்தக் கப்பல்களில் உள்ள மாலுமிகள் உணவு, எரிபொருள் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கப்பல் மாலுமிகளிடமிருந்து உணவுக்காக உருக்கமான கோரிக்கைகள் கிடைக்கப்பெற்ற போதிலும், அரசாங்கத்தின் முறையான அனுமதியின்றி சேவைகளை வழங்க முடியாது என இலங்கை கப்பல் முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment