Header Ads



கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீண்டும் பரிசீலிக்கும் எண்ணம் இல்லை - இந்திய அரசு திட்டவட்டம்



கச்சத்தீவு மற்றும் கடற்தொழில் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்களை மீண்டும் பரிசீலிக்கும் அல்லது திறக்கும் எண்ணம் எதுவும் தங்களுக்கு இல்லை என்றும், இலங்கையுடன் இந்தியா நல்ல இராஜதந்திர உறவுகளைப் பேணி வருவதாகவும் இந்திய மத்திய அரசு இன்று (6)  உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 


இந்த ஒப்பந்தங்களை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையிலேயே மத்திய அரசு தனது நிலைப்பாட்டை இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளது. 


நீதியரசர்களான சஞ்சய் குமார் மற்றும் சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன் ஆஜரான இந்திய சட்டமா அதிபர் ஆர். வெங்கடரமணி, இந்திய மீனவர்கள் தொடர்பான கவலைகளை இந்திய அரசு இராஜதந்திர வழிகள் மூலமாகக் கையாண்டு வருவதாகத் தெரிவித்தார். 


இருப்பினும், இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளுமாறோ அல்லது அதற்கேற்பச் செயல்படுமாறு இலங்கையைக் கட்டாயப்படுத்தவோ நிர்பந்திக்கவோ முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.