Header Ads



அழுது கொண்டு அனோஜன் கூறிய விடயம்


ஐ நா சபைக்கான வதிவிட பிரதிநிதி அவர்களை இன்று (7) நானும் அனோஜனின் தம்பியும் கஜேந்திரகுமார் அவர்களும் சந்தித்தோம்.


அனோஜனின் தம்பி சில நாட்களாகவே என்னோடு எனது வீட்டில் இருக்கின்றார். நான் இதை ஒரு பொறுப்பான வேலையாக மிகவும் கவனத்தோடு கையாள்கிறேன். 


அனோஜனுக்கு அழைக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.


தலையில் ஆறு இடத்தில் காயங்களுடன் இருப்பதாக அவரே அழைத்து எங்களிடம் கூறினார். 


கூரிய ஆயுதத்தால் அவர் தாக்கப்பட்டார் என அழுது கொண்டு கூறினார். 


இங்கு பாதிக்கப்பட்டவனை பாதுகாக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் செய்கிறோம்.


அனோஜன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டார் அதன் பின்னர் அவரின் பாதுக்காப்பை உறுதிப்படுத்துவதாக சிறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இதற்கு மேல் அவர்கள் அரசுக்கு கூறிய விடயத்தை நாம் கேள்விக்குடுட்படுத்த போவதில்லை. 


அனோஜனின் விடுதலை என்பது ஒரு உலகலாவிய பிரச்சாரம் அதனை அனைத்து வழிகளிலும் நாம் செய்வோம். 


இந்த விடுதலைக் கோரிக்கைகள் 2022இல் 48 அரசியல் கைதிகளில் ஆரம்பித்தது டொக்டர் ஷாபிக்கு நீதி பெற்றுக்கொடுக்க போராடினேன், ருஸ்தியின் விடுதலைக்கு காரணமாயிருந்தேன். அன்று ருஸ்தியின் தாய்க்கு ஒரு வாக்குறுதி வழங்கி வெளியில் வந்து அவரின் DOவை வெளியிட்டேன் அதே போல் தான் அனோஜனின் விடுதலைக்கான போராட்டமும்.


அரசியல் கைதிகளின் விடுதலை என நான் தொடர்ச்சியாக போராடுகின்றேன் அதில் உமர் ஹட்டப் எனும் ஒருவர் இருக்கின்றார். அவரை நான் நானா என்றழைப்பேன். அவரின் விடுதலைக்கும் உழைக்கின்றேன்


இன்று இலங்கையில் நாம் செய்ய வேண்டிய வேலைகள் நிறையவே இருக்கின்றது பொறுப்பற்ற சிலரின் வேலைகளால் இந்த வேலைகளில் கவனம் செலுத்துகிறோம்.


ஏனையவற்றை விட மிக அதிகமான attention இருப்பது மிகவும் சிக்கலாக இருக்கின்றது.


அடுத்தது நான் சகோதரத்துவதுடன் பழகும் முஸ்லிம் சமூகத்தில் பலர் மிக மோசமாக பேசுவது உண்மையில் மிகவும் வருத்தமாக உள்ளது.


இதில் ஒட்டுமொத்த நாடும் ஒரே குரலில் இருக்க வேண்டும். நடக்கும் விடயங்களை வைத்து அர்த்தமற்ற வாதங்களை மேற்கொள்ளாமல் இருப்பதே சிறப்பு.


நான் எழுதிய கூறிய விடயங்கள் அனைத்தும் உண்மையானவை அது மட்டுமே என்னால் உறுதியாக கூற முடியும்


அவை அனைத்தையும் இன்றைய சந்திப்பில் ஐ நா வதிவிட பிரதி நிதியிடம் கூறினேன். 

Rajkumar Rajeevkanth

No comments

Powered by Blogger.