கடந்த காலத்தைவிட மிகவும் வலுவான, தீர்க்கமான பதிலடி வழங்கப்படும்
தமக்கு எதிராக மீண்டும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், கடந்த காலத்தை விட மிகவும் வலுவான மற்றும் தீர்க்கமான பதிலடி வழங்கப்படும் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தெஹ்ரானில் தூதுவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அதேநேரம், இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு ஈரான் தொடர்ந்து உறுதியாக இருப்பதாகவும், தடைகள், அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் ஈரான் தனது நலன்களை பாதுகாப்பதில் இருந்து பின்வாங்காது என்றும் ஈரான் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Post a Comment