Header Ads



தீய காரியங்கள் பலவற்றைச் செய்தவர்தான் இந்த ஞானசாரர்


ஞானசாரரின் காவியுடை நீண்ட காலத்துக்கு முன்னரே களையப்பட்டிருக்க வேண்டும்.  அவருக்கு  மீண்டும் காவியுடை அணிவிக்க பௌத்த தேரர்களில் சிலர் இன்று பாதயாத்திரை தொடங்கியுள்ளனர்.


ஆனால் பௌத்த தர்மத்தின் படி பராஜிகா எனப்படும் காவியுடை களையப்படுவதற்கான தீய காரியங்கள் பலவற்றைச் செய்தவர் தான் இந்த ஞானசாரர். அவர் மதுபோதையில் வாகனம் செலுத்தி நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தியுள்ளார். அவருக்கு ஒரு மனைவி மற்றும் மகள் ஆகியோர் பிரான்சில் இருக்கின்றார்கள். ஆக காவியுடை களையப்படுவதற்கு இவ்வாறான தீய செயல்களே போதுமானது.


அப்போதெல்லாம் இந்த மகாநாயக்கர்களும், ஏனைய தேரர்களும் எங்கிருந்தார்கள்? மகாநாயக்கர்கள் மற்றும் மகாசங்கத்தினர் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டுதான் ஜே.ஆர் ஜயவர்த்தனவுக்கு முன்பிருந்தவர்கள், அவருக்குப் பின் வந்த பிரேமதாச, சந்திரிக்கா, மகிந்த, மைத்திரி மற்றும் ரணில் எல்லோரும் இந்த நாட்டை ஆட்சி செய்தார்கள்.


அப்போதெல்லாம் இந்த தேரர்களில் யாரும் மக்களுக்காக வீதிக்கு இறங்கவில்லை. இந்த அரசாங்கம் நாட்டை முன்னேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. இன்னும் கொஞ்ச காலம் அவர்களுக்கு வாய்ப்பளித்து பொறுமையாக இருந்தால் இந்த நாடு அபிவிருத்தியைப் பெறும்.


(ராஜாங்கனே சத்தாரத்ன தேரர்) 

No comments

Powered by Blogger.