Header Ads



இன்று நாமல், நாளை பிக்குகளுக்கோ, பிள்ளைகளுக்கோ..?


 நாமல் ராஜபக்‌ச கைது செய்யப்பட்டமை குறித்துப் பேசாமல் இந்த நாட்டின் சட்டம் மற்றும் நீதி குறித்துப் பேச முடியாது என்று  பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.


 "சுமார் 13 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே நாமல் ராஜபக்‌ச கைது செய்யப்பட்டுள்ளார். நாமல் ராஜபக்‌‌சவுக்குப் பிணை வழங்க முடியாத வகையில் அவரைச் சிறையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்‌ச குற்றமற்றவர் என்று நான் கூறவில்லை. சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முறையான நடைமுறைகள் உள்ளன.


இன்று நாமல் ராஜபக்‌சவுக்கு இழைக்கப்படும் இந்த அநீதி, நாளை பௌத்த பிக்குகளுக்கோ அல்லது சாதாரண பிரஜைகளின் இளம் பிள்ளைகளுக்கோ இழைக்கப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? நாட்டின் சட்டத்தையும் பிரஜைகளின் உரிமைகளையும் பாதுகாப்பதற்காக அனைத்துப் பிரஜைகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்" என தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.