Header Ads



ஞானசாரருக்கு பைத்தியமா...? நீதிமன்றத்தில் அம்பலமான விடயம்

 
மேன்முறையீட்டு நீதிமன்றம், கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றால் ஞானசாரருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இன்று (4) பொலிஸார் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.


அந்த சந்தர்ப்பத்தில் பிரதிவாதியான ஞானசார தேரர் சார்பில் சட்டத்தரணி பசான் கருணாரத்னவுடன் முன்னிலையான சட்டத்தரணி இரேஷ் செனவிரத்ன நீதிமன்றத்தில் விடயங்களைத் தெளிவுபடுத்துகையில், தனது கட்சிக்காரரான தேரர் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளமையாலேயே அவர் ஆச்சிரமத்திற்கு சென்று அங்கு தங்கியிருந்ததாகக் குறிப்பிட்டார். 


அவருக்கு விசேட பாதுகாப்பினை வழங்குமாறு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, அதற்கமைய சிறைச்சாலைக்குள் அவருக்கு விசேட பாதுகாப்பினை வழங்குவதற்குத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறும் கோரினார். 


முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற்கொண்ட மேலதிக நீதவான், பிரதிவாதியான ஞானசார தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். 


அதற்கமைய, ஞானசார தேரரை மேன்முறையீட்டு நீதிமன்றத்திலுள்ள பிடியாணைக்காக நாளை அந்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டதுடன், கொழும்பு மேல் நீதிமன்றத்திலுள்ள பிடியாணைக்காக நாளைமறுதினம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார். 


அதற்கு மேலதிகமாக, கொழும்பு நீதவான் நீதிமன்றத்திலுள்ள பிடியாணைக்காக எதிர்வரும் புதன்கிழமை அவரை அந்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 


அத்துடன், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் பாதுகாப்புத் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீதவான் இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

No comments

Powered by Blogger.