Header Ads



ஞானசாரருக்காக அனுதாபப்படும் ரணில், தானும் பொது மன்னிப்பு வழங்க தீர்மானித்ததாக அறிவிப்பு


ஞானசாரர் சிறையிலடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பௌத்த மத மற்றும் பௌத்த ஒழுக்கக் விதிகள் தொடர்பான சிக்கலொன்று உருவெடுத்துள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.


பிக்குகள் சிலர் என்னைச் சந்தித்துப் பேசுகையில், குற்றவியல் வழக்குகளில் பௌத்த விதிகளின்படி 'பாராஜிகா' (மன்னிக்க முடியாத 4 பெருங் குற்றங்கள்)) நிலையை அடைந்தால் மட்டுமே காவி உடையை அகற்ற முடியும் எனக் சுட்டிக்காட்டினர்.


நீதிமன்றத்தை அவமதித்தமை 'பாராஜிகா' குற்றமாகாது என்றும், மத விதிகளின்படி பிக்குகளை அழைத்து எச்சரித்து அல்லது தியானப் பயிற்சிகளுக்கு அனுப்ப மட்டுமே விதிகளில் இடமுள்ளது என்றும் தெரிவித்தனர்.


இதனையடுத்து அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இது குறித்துப் பேசுமாறு நான் அவர்களிடம் கேட்டுக்கொண்டேன். ஒரு வருட சிறைத்தண்டனை கழிந்த பின்னர், தேரரின் காவி உடையை அகற்றிச் சிறையில் வைத்திருப்பதா அல்லது பொதுமன்னிப்பு வழங்கி விடுவிப்பதா என்பது குறித்து அமைச்சரவையிலும் பேசப்பட்டது.


அக்காலகட்டத்தில் அப்போதைய பிரதமராக நான் உட்பட ஏனைய அமைச்சர்கள் இணைந்து, அரசியலமைப்பின் 9 ஆவது பிரிவின் கீழ் அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கத் தீர்மானித்தோம். காவி உடையைக் களைந்திருந்தால் அது மிகப்பெரிய மதப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கும்.


எனவே, ஞானசார தேரரின் விடயத்தில் தண்டனை வழங்கப்பட்ட பின்னர் உருவானது பௌத்த மத மற்றும் ஒழுக்க ரீதியான பிரச்சினையாகும். இங்குப் பௌத்த பிக்குகளின் பெரும்பான்மையான கருத்துக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது.


இவ்வாறான மத ரீதியான விவகாரத்தில் மாற்று அமைப்புகள் (CPA போன்றவை) தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என அவர் மேலும் குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.