Header Ads



பேராதனை - கொழும்பு கடுகதி ரயில் தடம் புரண்டது



பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில், கங்கொட மற்றும் கடிகமுவ ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (5) அதிகாலை 4.40 அளவில் தடம் புரண்டுள்ளது.


ரயில் பாதையில் மண் சரிவு மற்றும் கற்கள் விழுந்திருந்தமையினாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதுடன், இதன் காரணமாக மலையகப் பாதையிலான அனைத்து ரயில் சேவைகளும் தாமதமடைந்துள்ளன.


'டிட்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்டுப் புனரமைக்கப்பட்ட பின்னர், பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த முதலாவது அலுவலக ரயிலே (Office Train) இவ்வாறு தடம்புரண்டுள்ளது.


இந்த விபத்தினால் ரயிலின் முன்பகுதிக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த ரயிலின் சாரதியான டீ.ஏ.பி. செந்தநாயக, "பாதையின் குறுக்கே மண் சரிந்து விழுந்திருந்தது. நாங்கள் அதனைப் பார்க்கும்போது 10 மீற்றர் தூரம்கூட இருக்கவில்லை. மண் திட்டில் மோதியவுடன் ரயில் தூக்கி வீசப்பட்டது. அவ்வாறு மோதிய வேகத்திலேயே பாறையொன்றில் மோதி சேதம் ஏற்பட்டது" எனக் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.