Header Ads



சிறைக்குள் காவி உடை கழற்றப்பட்ட 63 பிக்குகள், ஞானசாரர் விதிவிலக்கானவர் அல்ல


ஞானசார தேரரின் காவி உடையை அகற்றி, அவருக்கு சாதாரண உடை அணிவிக்கப்பட்டமையானது சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்துக்கு அமைவாகவே இடம்பெற்றுள்ளது.


பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் தற்போது 63 பௌத்த தேரர்கள் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருவதாகவும், அவர்களுக்கும் இதே நடைமுறையே பின்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 


"சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் படி செயற்பட வேண்டிய நடைமுறை ஒன்று உள்ளது. இந்தச் சம்பவத்தில் எந்தவொரு சிறப்பு விதிவிலக்கும் செய்யப்படவில்லை. 


அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (6) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.