44 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டது
நீர்கொழும்பு பகுதியில் பெண் ஒருவர் சட்டவிரோதமாகச் சம்பாதித்ததாகக் கூறப்படும் ரூ.44.5 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை 14 நாட்களுக்கு முடக்குவதற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
நீர்கொழும்பில் வசித்து வந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் பெருமளவிலான சொத்துக்களைச் சேர்த்துள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதன்படி, கட்டுநேரிய பகுதியில் அமைந்துள்ள சுமார் ரூ.9.5 மில்லியன் பெறுமதியான காணி ஒன்றும், அந்தக் காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுமார் ரூ.35 மில்லியன் பெறுமதியான இரண்டு மாடி வீடும் அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளன.

Post a Comment