இலங்கைக்கு கிடைக்கும் 345 மில்லியன் டொலர்
சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையில், விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழான இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் 7ஆவது மீளாய்வை நிறைவு செய்வதற்கான கொள்கைகள் தொடர்பில் அதிகாரிகள் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்த உடன்பாடு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையால் அங்கீகரிக்கப்படவுள்ளது.
இதனையடுத்து, இலங்கைக்கு சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment