Header Ads



பிரான்ஸ் வாழ் இலங்கை முஸ்லிம்களின் 30 வருட கனவு


09/10/2026 அன்று பிரான்ஸ் வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மூன்று தசாப்த கால வரலாற்றில் ஒரு தனிச்சிறப்புமிக்க நாளாகும். 


பிரான்ஸ் வாழ் இலங்கை முஸ்லிம்களின் அடையாளமாகத் திகழும் பள்ளிவாசலும், கலாசார மத்திய நிலையமும், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளாலும் கிருபையாலும் இன்று உத்தியோகபூர்வமாக எமது வசமாகியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.


இந்த மகத்தான முயற்சிக்காகத் தியாகம் செய்து, அர்ப்பணிப்புடன் உழைத்த UFB நிர்வாகத்தினர் மற்றும் உதவிக் குழுவினர் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


குறிப்பாக, இந்நற்பணிக்காகப் பொருளாதாரப் பங்களிப்பும், உதவியும், ஒத்துழைப்பும் வழங்கிய இலங்கை மற்றும் இந்திய சகோதரர்கள், சகோதரிகள், சிறுவர்கள், தாய்மார்கள், பெற்றோர்கள், ஏனைய பல நாடுகளிலும் வசிக்கும் எமது சகோதர சகோதரிகள், சகோதர தமிழ் உறவுகள் மற்றும் அனைத்து உம்மத்தினருக்கும் எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


இந்த நற்பணியில் பங்காற்றிய அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலியை வழங்கி அருள்வானாக. ஆமீன்.



No comments

Powered by Blogger.