Header Ads



2027 ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய மாணவர்கள் அனுமதி


நவீனகால சவால்களுக்கு முகம்கொடுக்கும் விதத்தில் நிதான சிந்தனையும் தெளிவான மார்க்க அறிவுமுள்ள இளம் தலைவர்களை உருவாக்கும் பணியில் எமது கல்லூரி ஈடுபட்டு வருகின்றது.


06வருட கால முறையான ஷரீஆத்துறைப் பாடத்திட்டத்தையும் 3வருட கால ஹிப்ளுப்பிரிவு பாடத்திட்டத்தினையும் கொண்டுள்ள இக்கல்லூரியில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம், உயர் தரம் மற்றும் அல் ஆலிம், தர்மச்சாரிய, அகதியா போன்ற அரச பரீட்சைகளுக்கும் மாணவர்கள் தயார்படுத்தப்படுகின்றனர். தொழில் வழிகாட்டல், ஆளுமைவிருத்தி செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.


எனவே இக்கல்லூரியில் இணைந்து கல்வியைத் தொடர விரும்புவோர் விண்ணப்பப் படிவமொன்றை பெற்று 2026.11.30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் எமக்கு கிடைக்கக்கூடிய விதத்தில் அனுப்பிவைக்குமாறு வேண்டுகின்றோம். 


தகைமைகள்: 

01.அல்குர்ஆனை சரளமாக ஓதத்தெரிந்தவராகவும், நல்லொழுக்கமுடையவராகவுமிருத்தல்.


02.அல்குர்ஆன் மனனப்பிரிவில் சேரவிரும்புவோர் 2027ல் தரம் 06க் சித்தியடைந்தவராகவும் 12 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். 


03.ஷரீஆப்பிரிவில் சேரவிரும்புவோர் 2027.01.01ல் 15 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல், தரம் 09ல் கல்வி கற்பவராகவும் இருத்தல்.


விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும் முறை...

www.dharussalaam.org எனும் கல்லூரி இணையத்தளம் மற்றும் 

"தாருஸ்ஸலாம் அறபுக்கல்லூரி" எனும் Facebook கணக்கு.


மேலதிக தகவல்களுக்கு: 0772366824/0772366826

No comments

Powered by Blogger.