Header Ads



16 முன்னாள் அமைச்சர்கள் ஊழல் மோசடியில் தொடர்பு

 


ஒக்டோபர் 2024 முதல் ஒக்டோபர் 2026 ஆகிய காலப்பகுதியில் விசாரிக்கப்பட்ட இலஞ்ச, ஊழல் வழக்குகளில், 16 முன்னாள் அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்றுஅமைச்சர் சுனில் வட்டகல நாடாளுமன்றத்தில்  தெரிவித்தார்.


"இந்தக் காலப்பகுதியில் இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கையாளப்பட்ட வழக்குகளில் 3 முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள், ஒரு முன்னாள் முதலமைச்சர், முன்னாள் அமைச்சர்களின் 4  மனைவிகள், 7 பிள்ளைகள் மற்றும் ஆறு உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் ஆகியோரும் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.


ஊழல் என்பது முன்னாள் அரசியல் பதவியில் இருந்தவர்களுடன் மட்டும் நின்றுவிடாமல், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கியவர்களுக்கும் பரவியுள்ளது. அரசியல்வாதிகளால் பணியமர்த்தப்பட்ட வாகன ஓட்டுநர்கள் கூட இலஞ்சக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.