அனோஜனின் தண்டனையை ரத்துச் செய்க
சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனின் தண்டனையை இரத்து செய்வதற்கும், அவருக்கு சட்டரீதியான மற்றும் இராஜதந்திர ரீதியான உதவிகளை வழங்குவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Mp அமைச்சர் விஜித ஹேரத்துடன் இன்று வெள்ளிக்கிழமை (18) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேன்முறையீட்டின் தீர்ப்பில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், அனோஜனின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்வதற்கும், தண்டனையை இரத்து அல்லது குறைப்பதற்கும், சவூதி அரேபிய அதிகாரிகளுடன் அவசரமான இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிவிவகார அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment