பொதுஜன பெரமுன NPP க்கு எந்தவிதமான சவாலையும் ஏற்படுத்தாது
பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசாங்கத்திற்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கு எந்தவிதமான அரசியல் சவாலையும் ஏற்படுத்தாது. கூட்டங்களுக்கான திகதிகளை விரைவில் குறித்து கொள்வது நல்லது, பல பேருக்கு நீதிமன்றத்தில் திகதி வழங்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார் .
கடந்த காலங்களில் பல்வேறு கருத்து வேறுபாடுகளுடன் வெவ்வேறு கட்சிகளாகவும் குழுக்களாகவும் பிரிந்து அரசியல் செய்து வந்தவர்கள், தற்போது தங்களின் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக ஒரே மேடையில் ஒன்று கூடி வருகிறார்கள். இத்தகைய பேரணிகள் நடப்பதன் மூலம், இந்த பழைய அரசியல்வாதிகள் அனைவரும் ஒரே கொள்கைகளை உடையவர்கள் என்பதை நாட்டு மக்கள் மிகத் தெளிவாக அடையாளம் கண்டுகொள்ள ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.

Post a Comment