மேடையில் தாம் ஓரு புலி என குறிப்பிட்டது மிருகத்தையே அன்றி தமிழீழ விடுதலைப் புலிகளை அல்ல
மேடையில் தாம் ஓரு புலி என குறிப்பிட்டது மிருகத்தையே அன்றி தமிழீழ விடுதலைப் புலிகளை அல்ல என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
‘புலி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியமை மற்றும் புலம்பெயர் மக்கள் தொடர்பான பேச்சு குறித்து எழுந்த சர்ச்சை தொடர்பாக அவர் விளக்கமளித்துள்ளார்.
தான் 'புலி' என்ற மிருகத்தையே குறிப்பிட்டதாகவும், அது தனக்குப் பிடித்தமான மிருகம் என தெரிவித்துள்ளார்.
சிங்கள மக்கள் தங்களை ‘சிங்கம்’ எனக் கூறிக்கொள்வது போல, தான் ‘புலி’ எனக் கூறுவதில் எந்தத் தவறும் இல்லை எனவும், அது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைக் குறிக்கவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
தாம் விடுதலைப் புலிகளின் புலம்பெயர் அமைப்பு என்று கூறவில்லை. வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களையே 'புலம்பெயர்ந்தோர்' எனக் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.

Post a Comment