Header Ads



மரண தண்டனை விதிக்கப்படும் சிறைக்கு மாற்றப்பட்ட அனோஜன்



சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழரான சிவராசா அனோஜன், மரண தண்டனை விதிக்கப்படும் சிறைச் சாலைக்கு மாற்றப்பட்டு இருப்பதாக அவரது சகோதரர் சிவராசா ஹம்சிதம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.


எதிர்வரும் 20 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அனோஜனுக்கு அந்த நாட்டு அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும், கைது செய்யப்பட்ட நாள் முதல் தனது சகோதரனுடன் தொலைபேசியூடாக உரையாட முடிந்ததாகக் கூறிய அவரது சகோதரன், கடந்த சில தினங்களாக அவருடன் தொடர்புகொள்ள முடியாது இருந்ததாகவும் குறிப்பிட்டார்.


இருப்பினும், அனோஜன் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தன்னுடன் தொடர்புகொண்டதாகவும் அவர் கூறினார். 

No comments

Powered by Blogger.