Header Ads



உரிய தரப்பினருக்கே அறிவித்திருக்க வேண்டும்


உயிர்த்த ஞாயிறு  தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரிசஹ்ரான் ஹாஷிமிற்கு பதிலாக புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


இவ்வாறான ஓர் தகவல் கிடைக்கப்பெற்று இருந்தால் அது குறித்து பொலிஸாரும், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளும் விசாரணை நடத்துவார்கள். இந்த விவகாரம் தொடர்பில் ஊடக சந்திப்பு நடத்தப்பட்டு இருப்பதனால் அதிகாரிகள் விசாரணைகளை முடுக்கி விடுவார்கள். விசாரணைகளின்பின் புலனாய்வு தகவல்கள் வழங்கப்படும்.


இவ்வாறான ஓர் விடயம் குறித்து நாட்டின் பொறுப்பு வாய்ந்த ஒரு பிரஜை என்ற அடிப்படையில்  சம்பிக்க ரணவகக் ஊடக சந்திப்பு நடத்தாமல் உரிய தரப்பினருக்கே அறிவித்திருக்க வேண்டும் என நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.