ஜம்இய்யத்துல் உலமா அலுவலகம் சென்று, வருத்தம் தெரிவித்த இந்து குருமார்கள்
இலங்கையிலுள்ள முன்னணி இந்து அமைப்புகளின் குருமார்கள் மற்றும் பிரதிநிதிகள், 2026 செப்டம்பர் 23 அன்று, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்திற்கு வருகை தந்து நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் முக்கிய சந்திப்பொன்றில் ஈடுபட்டனர்.
நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நிந்தனை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சவூதி அரேபிய நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் என்ற நபரின் மன்னிப்பு மற்றும் விடுதலை தொடர்பில் அந்நாட்டு அரசாங்கத்திடம் ஜம்இய்யா சார்பில் கோரிக்கையொன்றை முன்வைக்குமாறு கோரி இச்சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது, வருகை தந்திருந்த குருமார்கள் மற்றும் பிரமுகர்கள் குறித்த நபரின் பக்குவமற்ற செயலுக்காக தங்களது வருத்தத்தையும் மன்னிப்பையும் முதற்கண் தெரிவித்துக் கொண்டதுடன், இவ்வாறான பிழையான செயற்பாடுகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதையும் சுட்டிக்காட்டினர்

Post a Comment