Header Ads



ஈஸ்டர் தாக்குதல்: முழு விசாரணையும் முடிவடைந்து விட்டதாக கருத முடியாது


2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் சதித்திட்டம் தீட்டிய மற்றும் அதற்கு உதவி, ஆதரவு வழங்கியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் திருப்தியடைவதாக கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.


இந்தத் தீர்ப்புடன் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துவிட்டதாக கருத முடியாது. தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் மற்றும் அதற்கு உதவி, ஆதரவு வழங்கியவர்களுக்கு அப்பால், இந்தத் தாக்குதலை பயன்படுத்தி அதிகாரத்தைப் பெற முயன்றதாக கூறப்படும் தரப்பினரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். 


அத்துடன், தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் அதிகாரிகளுக்கு போதுமான தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுடன், இந்த விடயம் தொடர்பிலும் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

No comments

Powered by Blogger.