அநுரகுமாரவின் அதிகார மோகத்தை முறியடிக்க வீதிக்கு இறங்கியுள்ளோம்
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அதிகார மோகத்தை முறியடித்து, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை வீழ்த்தி, உயரிய நீதிமன்றத்தைப் பாதுகாத்து நிலைநிறுத்தவே ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் இவ்வாறு வீதிக்கு இறங்கியுள்ளோம். 22 ஆவது திருத்தத்தின் ஊடாக அதிகார மோகத்துடன் செயற்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டின் ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும், நீதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளையும் செய்து நீதித்துறையை சீரழித்து நாசப்படுத்தும் வேலைகளை செய்து வருகின்றது.
நாட்டிற்கான ஒரே மாற்றுத் தரப்பாக காணப்படும் ஐக்கிய மக்கள் சக்தி இந்த மோசமான 22 ஆவது திருத்தத்தை ஜனநாயக முறையில் தோற்கடிப்பதற்கு நேற்றும் இன்றும் நாளையும் தேவையான அனைத்தையும் செய்யும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
22 ஆம் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சத்தி கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று (03) நடத்திய அமைதி வழியிலான கண்டனப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

Post a Comment