Header Ads



வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் அடித்துக் கொலை


முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில், வீடொன்றில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் இன்று (24) அதிகாலை  அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.


 தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோர் உறங்கிக்கொண்டிருந்த வேளையில், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத நபர்கள் தந்தை மற்றும் தாயின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளனர்.


இதன்போது மகள் கூச்சலிட்டதையடுத்து, அயலவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்டு மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். எனினும், இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

No comments

Powered by Blogger.