Header Ads



இஸ்லாமிய சகோதரர்களைக் கோபமூட்டும் நோக்கத்தோடு...


வினயமான வேண்டுகோள்...


சவுதி அரபு இராச்சியத்தில் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கிற மரண தண்டனையை இரத்துச் செய்வதற்கான பல முயற்சிகளை இன, மத பேதமில்லாமல் அனைத்து சமூகங்களைச் சார்ந்த தலைவர்களும் தற்போது மேற்கொண்டுள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். 


இதில் இஸ்லாமிய தலைவர்களது பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். முஸ்லிம் அரசியல் தலைவர்களும் மத தலைவர்களும் தாங்களாகவே முன்வந்து இந்த அளப்பெரும் பணியைச் செய்கிறார்கள். அதேவேளையில் இ‌‌ந்த ஒற்றுமையைக் குலைப்பதற்கென்றும் இந்த முயற்சி தோல்வியடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்போடும் சில தீய சக்திகள் செயற்படுவதைக் காண முடிகிறது. 


வேண்டுமென்றே இஸ்லாமிய சகோதரர்களைக் கோபமூட்டும் நோக்கத்தோடும் பொது வெளியில் கருத்துக்கள் பகிரப்படுகின்றன. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானதும் அனோஜனின் நன்மைக்குப் புறம்பானதுமாகும். இராஜதந்திர ரீதியில் இந்த விடயத்தைக் கையாள்வதற்கு போதிய அவகாசம் அளிப்பதாக இருந்தால் இதைக் குறித்து கருத்துக்கள் எதையும் (அனோஜனை மன்னிக்கும்படியாக வேண்டுவதைத் தவிர) பொது வெளியில் பகிர்வது உசிதமானதல்ல.

 

ஆபத்தானதும் கூட. ஆகையால் ஒரு உயிரைக் காப்பாற்றும் முயற்சிகள் வெற்றி பெறும் வகையில் எமது நாவினைக் காப்போம்; அவரை மன்னிக்கும்படியாக சவுதி அரபு இராச்சியத்தை வேண்டுவோம்; இறை பக்தி உடையவர்கள் அதற்காக இறைவனிடத்தில் மன்றாடுவோம். 


M. A. Sumanthiran

(செயலாளர் - இலங்கைத் தமிழரசுக் கட்சி) 

No comments

Powered by Blogger.