Header Ads



உரிமையர்களுக்கு முக்கிய எச்சரிக்கை


வீடுகள், வணிகத் தலங்கள், ஏனைய சொத்துக்களை வாடகைக்கு விடுவதற்குமுன்ர், அவை குறித்தும் சம்பந்தப்பட்ட நபர்களின் பின்னணி குறித்தும் சரியாக ஆராயுமாறு உரிமையாளர்களிடம் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.


ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் சஞ்சீவ மெதவத்த, குற்றச் செயல்களுடன் தொடர்புடைய போதைப்பொருட்கள், ஆயுதங்கள், ஏனைய பொருட்கள் அடிக்கடி வாடகைக்கு பெறப்பட்ட சொத்துக்களிலிருந்து கண்டெடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.


சில சொத்து உரிமையாளர்கள் வாடகைக்கு வருபவர்களின் பின்னணியை ஆராயாது தங்களது சொத்துக்களை வாடகைக்கு விடுவதாகவும், ஏதேனும் ஒரு சொத்தினுள் ஏதேனும் குற்றச்செயல் இடம்பெற்றால், நிலவியுள்ள சட்ட நிலவரங்கள் மற்றும் சந்தர்ப்பங்களுக்கு அமைவாக அந்த சொத்து உரிமையாளர்களும் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க நேரிடலாம் என எச்சரித்துள்ளார்.


தமது பகுதியில் நடமாடும் சந்தேகத்திற்கிடமானவர்கள் அல்லது நடவடிக்கைகள் குறித்தும், குறிப்பாக நகரத்திலோ அல்லது கிராமத்திலோ அடிக்கடி காணப்படாத புதியவர்கள் நடமாடினால் அது குறித்து உடனடியாகக் காவல்துறைக்குத் தெரிவிக்குமாறும் பிரதி காவல்துறை மா அதிபர் சஞ்சீவ மெதவத்த மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments

Powered by Blogger.