Header Ads



600 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசலை இடிக்க முயற்சி


மத்தியப் பிரதேசம் உஜ்ஜைன் பகுதியில் உள்ள காப்பாற்ற உள்ளூர் மக்கள் இன்று (27) அதிகாலையில் வீதிகளில் இறங்கினர். 600 வருடங்கள் பழமையான இந்தப் பள்ளிவாசல் வீதி விரிவாக்கத்திற்காக அகற்றப்பட வேண்டுமென அங்குள்ள நிர்வாகம் கோரியுள்ளது. எனினும் அதே பகுதியில் உள்ள கோயிலை அகற்ற நிர்வாக எந்த நடவடிக்கையும் மேற்கோள்ளவில்லை என முஸ்லிம்கள் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உஜ்ஜைனின் கோபால் கோயில் சந்திப்பில் உள்ள ஷாஹி மசூதி மீது மட்டும் ஏன் சாலை விரிவாக்க நடவடிக்கை எனும் கோடாரி விழுகிறது?


https://www.facebook.com/share/r/1FfLvXZKbb/


அதே தெருவில், சாலைக்கு மறுபுறம் உள்ள கோயில் நிர்வாகத்திற்கு "பக்தி"யாகத் தெரிகிறது; ஆனால் பல நூற்றாண்டுகள் பழமையான மசூதி மட்டும் "ஆக்கிரமிப்பு" என்று கருதப்படுகிறதா?


நகரத்தை மேம்படுத்துவதே உண்மையான நோக்கமாக இருந்தால், இரு தரப்பிலும் அளவீடுகள் சமமாக இருந்திருக்கும். ஆனால் நோக்கமே ஒருதலைப்பட்சமாக இருக்கும்போது, ​​அங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதில்லை; மாறாக, பாரபட்சமே மேலோங்குகிறது.


வளர்ச்சிக்கான விலையைச் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று அரசியலமைப்பின் எந்தப் பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது?

No comments

Powered by Blogger.