Header Ads



இந்து சகோதரியின் 2 வயது குழந்தையை காப்பாற்ற 45 நிமிடங்களில் குவிந்த பலகோடி ரூபாய் (வீடியோ)


ஒரு ஏழை இந்து சகோதரியின் 2 வயது பெண் குழந்தை உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சை செலவினங்களுக்காக புதுடெல்லி ஜும்மா மசூதியில் ஜும்மா தொழுகைக்கு வந்த முஸ்லிம்கள் வாரி வழங்கிய தொகை 6.33 கோடி ரூபாய்.


டெல்லியை சேர்ந்த இந்து சகோதரியின் 2 வயது பெண் குழந்தை அபூர்வமான Spinal Muscular Atrophy SMA Type 1 நோய் பாதித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.


இந்த குழந்தைகளுக்கு உயர் சிகிச்சை வழங்கி உயிரைக் காப்பாற்றுவதற்கு வெளிநாட்டில் இருந்து ஊசி மருந்து இறக்குமதி செய்வதற்கு 9.70 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.


இந்து சமூகத்தை சேர்ந்த ஏழை தாய் பல்வேறு இடங்களிலும் உதவி தேடி அலைய அவரின் கண்ணீரை துடைக்க எவரது கரங்களும் நீளவில்லை.


எய்ம்ஸ் மருத்துவமனை நோயாளிகளுக்கு உதவும் வகையில் Fund Raise நடத்தும் சோசியல் மீடியா இன்ஃபுளுன்சர் சன்னி மஹோர் எனும் நபர் வீடியோக்கள் மூலம் உதவி வேண்டி பதிவு செய்தும் எடுபடவில்லை.


இந்த நிலையில் அந்த குழந்தையின் மருத்துவ உதவியின் அத்தியாவசியம் குறித்த தகவல் டெல்லியை சேர்ந்த முகமது கலீபா எனும் மீடியா நபருக்கு தெரியவர டெல்லி ஜும்மா மசூதி நிர்வாகத்தின் உதவியோடு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு வந்த முஸ்லிம்களிடம் தெரிவிக்கப்பட்டது.


அந்த குழந்தையின் சிகிச்சை விபரங்கள் கூடிய டி.ஷர்ட் அணிந்த வாலண்டியர்கள் கையில் கிடைத்த அட்டை பெட்டிகளும், க்யூ ஆர் கோடு தாங்கிய பதாகைகள் ஏந்தி ஜும்மா மசூதி வளாகம் முழுவதும் நின்று நிதி சேகரிப்பு இயக்கம் நடத்தினர்.


ஏழை இந்து குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு உதவும் வகையில் ஜாதி மதம் பாராமல் தொழுகைக்கு வந்த முஸ்லிம்கள் தங்கள் பாக்கெட்டில் இருந்த தொகையை அப்படியே போட்டவர்கள், டிஜிட்டல் முறையில் அந்த அக்கவுண்ட்டில் செலுத்தியவர்கள் என்று வாரி வழங்கிய தொகை ஆறு கோடி 33லட்சம் ரூபாய் எனும் இமாலய உதவி வடமாநில ஊடகங்கள் முஸ்லிம்களின் காருண்யம் என்று புகழாரம் சூட்டி வருகின்றனர்.


மதம் கடந்த மனித நேயம் வாழ்க

Colachel Azheem

No comments

Powered by Blogger.