“பலன்புர முஸ்லிம்கள்” நூல் வெளியீடு" மைத்ரி, கரு, டலஸ் பங்கேற்பு
- பீ.எம்.முக்தார் -
களுத்துறை மாவட்டத்தின் எல்லைக் கிராமமான பலாந்தை பிரதேச முஸ்லிம் சமூகத்தின் வரலாறு, கலாசாரம் மற்றும் சமூகப் பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட “பலன்புர முஸ்லிம்கள்” எனும் நூல் இன்று (13) ஞாயிற்றுக்கிழமை பலேந்த பிரதேசத்தில் வெளியிடப்பட்டது.
மொஹமட் நஸ்ரானில் எழுதப்பட்ட இந்நூல், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் அமைச்சர்களான டலஸ் அழகபெரும, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பீ. பெரேரா, ஜகத் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பலன்துபுர அல்லது பலாந்தை பிரதேச முஸ்லிம் மக்களின் வரலாறு, பிரதேசத்தில் நிலவும் இன நல்லிணக்கம், சமய மற்றும் கலாசார அடையாளம், அத்துடன் பிரதேசத்தின் சமூக மற்றும் கல்வி வளர்ச்சிக்கு அவர்கள் வழங்கிய பங்களிப்பு ஆகியவற்றை இந்த நூல் எடுத்துக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வரலாற்றில் சிறப்புமிக்க வரலாற்றுப் பாத்திரமாகக் கருதப்படும் வீதிய பண்டார (Weediya Bandara) தளபதியின் வரலாற்றுடனும் பலாந்தை பிரதேசத்திற்கு தொடர்பு காணப்படுகிறது.
இந்த வரலாற்றுப் பின்னணியில், பிரதேச முஸ்லிம் சமூகத்தின் இருப்பு மற்றும் அவர்களின் பங்களிப்பை வெளிக்கொணர்வது இந்நூலின் முக்கிய சிறப்பம்சமாகும்.
களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை தேர்தல் தொகுதிக்குட்பட்ட பலாந்தை, தனித்துவமான வரலாற்று மற்றும் கலாசார அடையாளத்தைக் கொண்ட கிராமமாகும்.
சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையே நீண்டகாலமாக நிலவி வரும் நல்லிணக்கத்தையும் இந்நூல் பிரதிபலிக்கிறது.

Post a Comment