Header Ads



நான் கண்களை கட்டிக் கொண்டுள்ளேன் - ஜனாதிபதி


ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் நான் கண்களை கட்டிக் கொண்டுள்ளேன். நீதிமன்றத்தினதும் கதவருகில் நிற்கிறார்கள்.  அரசாங்கத்துக்கு அச்சுறுத்தல் ஏதும் கிடையாது. ஊழல்வாதிகளும், படுகொலையாளர்களும் தான் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தான் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டுக் கொண்டு ஒன்றிணைந்துள்ளார்கள். கூட்டணியமைத்துள்ளார்கள்.


தந்தை ஜனாதிபதி ஆகவே மகனும் ஜனாதிபதியாக வேண்டும் என்று குறிப்பிடும் அரசியல் கலாசாரம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஊழல்வாதிகளுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கடந்த 2 ஆண்டுகாலமாக கேள்வியெழுப்பினார்கள். தற்போது நடவடிக்கை எடுக்கும் போது திணறுகிறார்கள். அரசியல் பழிவாங்கள் என்று புலம்புகிறார்கள்


ஊரில் எவரேனும் திருட்டு மற்றும் படுகொலை சம்பவத்துக்காக சிறைச்சென்றால், ஊரில் அவரை ஒதுக்கி வைப்பார்கள். ஆனால் பல பில்லியன் ரூபா கொள்ளையடித்த அரசியல்வாதி சிறைச் சென்றார் அவர் வாழ வேண்டும் என்று வாழ்த்துப்பாடும் ஒரு தரப்பினர் இன்றும் உள்ளார்கள். அவர்கள் தான் நேற்று அநுராதபுரத்துக்கு வந்தார்கள். ஒன்றிணைவது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.


கஹடகஸ்திகிலிய பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.