Header Ads



சவ்வியின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.


சவ்வி வர்ஸ்னே - வயது 23   பிரபலமான யுட்யூபர். 2 லட்சத்துக்கும் அதிகமாக பின் தொடர்கிறார்கள். இன்ஸ்க்ராமில் இவரை பின் தொடர்பவர்கள் ஒரு லட்சத்துக்கும் மேல்.


அவ்வப்போது இவர் இஸ்லாமிய வெறுப்பை பதிவிடுவார். முஸ்லிம்கள் இந்தியாவில் இருக்கக் கூடாது என்றும் அவர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்றும் பதிவிடுவார். குர்ஆன் கூறும் சொர்க்க வாழ்வை கிண்டலடித்து பதிவிட்டிருந்தார். இதனால் இவரை பின்தொடர்பவர்கள் மேலும் அதிகமாயினர்.


போன வாரம் உஜ்ஜயின் நகருக்கு தனது குடும்பத்தோடு ஆன்மீக சுற்றுலா சென்றிருந்தார். அவ்வாறு செல்லும் போது ஒரு லாரியின் மீது இவர்கள் சென்ற கார் பயங்கரமாக மோதியது. சம்பவ இடத்திலேயே சவ்வியும் அவரது தாயாரும் உடல் நசுங்கி இறந்தனர். ஆழ்ந்த அனுதாபங்கள்... இது தான் உலக வாழ்க்கை.


நான் இதைச் சொல்வதன் ஒரே நோக்கம் இதுதான்: யார் மீதும் அளவுக்கு அதிகமாக வெறுப்பைக் கொள்ளாதீர்கள், எல்லோரும் இறக்கத்தான் வேண்டும்; இந்த உலகம் ஒரு தற்காலிகமான இடம், இங்கு வந்தவர்கள் திரும்பிச் சென்றே ஆக வேண்டும். நீங்கள் நன்மை செய்தால், உங்கள் நற்செயல்களுக்காக நினைவு கூரப்படுவீர்கள். 


நமக்கு கிடைக்கும் காலம் 50 ஆண்டுகளோ 60 ஆண்டுகளோ 70 ஆண்டுகளோ.. இறைவனே அறிவான்.


வாழும் காலங்களில் பிறருக்கு துன்பமிழைக்காது நல்லதை செய்து போகும் வழிக்கு புண்ணியம் தேடிக் கொள்வோம்.


சவ்வியின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Nazeer Suvanappiriyan 




No comments

Powered by Blogger.